PUBLISHED ON : ஆக 17, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமும் இரவில், 8 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7,000 பேர்களை, 10 ஆண்டுகளுக்கு மேல், ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பகல் நேரத்தில் போடும் குட்டித் தூக்கம், இந்த எட்டு மணி நேரக் கணக்கில் சேராது. எனவே, இரவு நேரத் தூக்கம், 8 மணி நேரத்திற்குள் இருந்தால் நல்லது. அதற்கு, இரவு உணவின் அளவை குறைக்க வேண்டும். அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால், எட்டு மணி நேர தூக்கத்தை குறைக்க முடியாது.

