தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உருளைக்கிழங்கில் இத்தனை பயன்களா?

உருளைக்கிழங்கில் இத்தனை பயன்களா?

உருளைக்கிழங்கில் இத்தனை பயன்களா?


PUBLISHED ON : ஜூலை 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உருளைக்கிழங்கில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாக உள்ள, புளித்த அமிலங்களைச் சமன்படுத்தி, உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில், நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் வளர்த்து விடுகிறது.

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயை குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலை சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்கு தோலுடன் மசித்து, தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை சாப்பிட்டால், நல்ல முன்னேற்றம் ஏற்படும். வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறு உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்கை, பச்சையாக மிக்சி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு

சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.

இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து, உடலுக்கு நன்மை

செய்கிறது. இரு பச்சையான உருளைக்கிழங்குகளை, தோலுடன் மிக்சியில் அரைத்து சிறிது தண்ணீர் விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, குடிக்க வேண்டும். அமிலத்தை வெளியேற்றும். தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும்

குணமாகும் சாத்தியம் உண்டு.

அவித்த உருளைக்கிழங்கு தோலை சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும், கீல் வாதம் குணமாகும்.

இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும். நீண்ட நாள் மலச்சிக்கல் தீரும் கெட்டுப்போன ரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்கலால் அவதிப்படுவோர், தினசரி உணவில், உருளைக்கிழங்கை அவித்தோ, வேக வைத்தோ, பொரித்தோ, சூப் வைத்தோ சேர்த்துக்கொள்ள வேண்டும். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பீட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்து சாப்பிட்டால், தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும்.

மலச்சிக்கலும் அகன்று விடும். வயது காரணமாக முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி, முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கி, இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us