தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மசாலா வைத்தியம் இருக்க

மசாலா வைத்தியம் இருக்க

மசாலா வைத்தியம் இருக்க


PUBLISHED ON : பிப் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிற நாட்டு உணவுகளோடு ஒப்பிடுகையில், இந்திய நாட்டு உணவு வகைகள் முற்றிலும் வேறுபட்டது. அதற்கு காரணம், நம் பதார்தங்களில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். பல வகை நறுமணம் வீசும் மசாலா பொருட்களை நாம் உணவுகளில் சேர்க்கிறோம். மசாலாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்கள், உடலுக்கு தெம்பை கொடுக்கிறது. தனித்தனியாக பார்க்கும் போது, மருத்துவத்துக்கான காரணியாகவும் விளங்குகிறது.

கிராம்பு: பல்வலி பல் துவாரங்கள், தொற்றுக்கள் மற்றும் ஈறு நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால், பல்வலி ஏற்படுகிறது. பல் மருத்துவரை அணுகுவது கட்டாயம் தான் என்றாலும் கூட, உடனடி இயற்கை தீர்வை அளிக்கும் சில வழிகள் உள்ளன.

கிராம்பு, பல்வலியுடன் போராடும் இயற்கையான நிவாரணி. கிராம்பு ஒன்றை பாதிக்கப்பட்ட பற்களின் இடையில் வைத்து, சிறிது நேரத்திற்கு வாயை இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். கிராம்பில் உள்ள ரசாயனம் வெளியேறி, வலிக்கு நிவாரணம் அளிக்கும்.

ஜாதிக்காய்: நோய் எதிர்ப்பு குணம் கொண்டது. பல்வலியை நீக்க ஜாதிக்காய் பொடியை, பல் மீது தடவி, சிறிது நேரம் கழித்து வாயை கொப்பளித்து விட்டால், வலி நின்று விடும். பல்பொடியுடன் ஜாதிக்காய் பொடியையும் சேர்த்து பல் துலக்கினால், பற்கள் பளிச்சிடும்.

பட்டை: ஈறுகளுக்கும், பற்களுக்கும், நன்மையை அளிக்கிறது. அதற்கு காரணம் அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு. உடனடி நிவாரணத்தை பெற, சிறிய அளவிலான இலவங்கப்பட்டையை வாயில் போட்டு மென்று, மெதுவாக அதன் சாறை விழுங்கினால் போதும்.

ஏலக்காய்: பலருக்கு, வாய் துர்நாற்றம் பெரிய தடையாக உள்ளது. ஏலக்காயில், இனிமையான வாசனையும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களும் அடங்கியுள்ளதால், வாய் துர்நாற்றத்திற்கு, சிறந்த நிவாரணயாக விளங்குகிறது.

நல்லெண்ணெய்: நல்லெண்ணெயை, வாயுக்குள் அடங்கி, 15 நிமிடங்கள் நன்றாக கொப்பளித்து, நுரை வந்தவுடன் துப்பிவிட்டு, வாயை நன்றாக அலச வேண்டும். தினமும் காலை, இதை செய்து வந்தால், பற்கள் பளிச்சிடும்.

காய்ந்த இஞ்சி பொடி: வீங்கிய ஈறுகளின் மீது தடவினால், ஈறுகளில் ஏற்பட்டுள்ள வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளதால், ஈறு வலியை போக்கி நிவாரணம் அளிக்கும்.

கசகசா: உடலில், அளவுக்கு அதிகமாக வெப்பம் தங்கும் போது, வாயில் புண் ஏற்படும். உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் கசகசாவை பயன்படுத்தினால், சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள்: மிகச்சிறந்த ஆன்டிசெப்டிக் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும் பொருள் மஞ்சள். வாய் புண்ணை எதிர்த்து போராடி, அது மீண்டும் வராமல் தடுக்கும். ஒரு சிட்டிகை மஞ்சளை, நீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை வாயில் தடவினால், வாய்புண் குணமாகும்.

வெந்தயம்: குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்பு தன்மை உடையது. வறட்சியை அகற்றும் தன்மை கொண்டது. இதிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியை கூட்டும்; நரம்புகளைப் பலப்படுத்தும். வெந்தயக்கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது. சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. முடி உதிர்தல், தோல் நோய், வாயு தொல்லையை போக்க பயன்படுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us