தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை

மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை

மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணத்தக்காளியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த மருத்துவ குணம் உள்ள சத்துணவாகும். இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது மணத்தக்காளி.

இக்கீரை சத்துணவு பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை வெளியேறவும், வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

மனசு காரணம் இன்றி சில நேரங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளி கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால், உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை

நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்து கொடுக்கும். இக்கீரை சிறிது கசப்புச்சுவையுடையது. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். நன்கு பசி எடுக்க செய்யும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் இப்பழம் நல்லது. செரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் ரசம் குணப்படுத்திவிடும். ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை மிக்சி மூலம் சாறாக மாற்றி, பிடித்த பழ சாறுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருந்தினால், வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்று புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.

இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும்.

இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றுக்கு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மிக்ஸி மூலம் எடுத்த கீரைச் சாற்றை இவர்கள் அருந்த வேண்டும். இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் தணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்

கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வரவேண்டும்.

மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தவும், பயனுள்ளது மணத்தக்காளி கீரை. இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அதைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us