தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெண்களை பாதிக்கும் பிளாஸ்டிக்

கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெண்களை பாதிக்கும் பிளாஸ்டிக்

கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெண்களை பாதிக்கும் பிளாஸ்டிக்


PUBLISHED ON : ஏப் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்னை, கர்ப்பப்பை தொடர்பானதாகவே இருக்கிறது. இது, 13 - 45 வயது வரை உள்ளவர்களை பாதிக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், வாழ்க்கை முறை மாற்றம். குறிப்பாக, நாம் சாப்பிடும் உணவுகள்.

பாரம்பரியமான உணவுகளை தவிர்த்து, கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளையே, பெரும்பாலும் சாப்பிடுகிறோம். அதிலும், 10 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் அதிகமாகி வருகிறது; அதற்கு ஏற்றாற் போல் உடலுழைப்பும் கிடையாது.

உடலில் கொழுப்பு அதிகம் சேரும் போது, அது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனாக மாறும். இந்த ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால் மட்டுமே, கரு முட்டை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் மாதவிடாய் வரும்.

உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பில், ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகும் போது, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்னைகள் வருகிறது.

இதுதவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், பிளாஸ்டிக் டப்பா மற்றும் கப்புகளில் சூடான உணவுகளை வைக்கும் போது ஏற்படும் நச்சு, ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கப்படும் கோழி, மாடு மற்றும் இவற்றின் பால், இறைச்சி, முட்டைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு உட்பட, பல்வேறு விதமாக உணவுகளில் சேரும் விஷம், பொதுவாக உடல் நலத்தை பாதிக்கிறது என்றாலும், பெண்கள் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

உணவுகள் வழியே பிளாஸ்டிக், கெமிக்கல்கள் உடலில் சேரும் போது, ஜீனோ ஈஸ்ட்ரோஜென்னாக மாறி, உடலில் சேருகிறது.

இதுவும் கர்ப்பப்பையின் உள் அடுக்கான எண்டோமெட்ரியத்தில், அதிகப்படியான வளர்ச்சிக்கு வழி செய்கிறது.

டாக்டர் யோ.தீபா,

இயற்கை மருத்துவர், சென்னை.

sakshaayaan@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us