கனவு தவிர்... நிஜமாய் நில்!: இரவில் சுரக்கும்... கேன்சரை தடுக்கும்!
கனவு தவிர்... நிஜமாய் நில்!: இரவில் சுரக்கும்... கேன்சரை தடுக்கும்!
PUBLISHED ON : பிப் 04, 2018

பெண்களை பாதிக்கும் கேன்சரில், கர்ப்பப்பை வாய் கேன்சர், சில ஆண்டுகளுக்கு முன் வரை முதலிடத்தில் இருந்தது; அந்த இடத்தை, தற்போது, மார்பக கேன்சர் பிடித்துள்ளது.
இதில், அதிகம் கவலை தரக்கூடிய விஷயம், மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களில், 49 சதவீதம் பேர், 50 வயதிற்கும் குறைவான பெண்கள். குறிப்பாக, சமீப ஆண்டுகளில், 20 - 30 வயதில் இருக்கும்
பெண்களுக்கு, அதிக அளவில் மார்பக கேன்சர் வருவதைப் பார்க்க முடிகிறது.
கேன்சருக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரப்பு குறைவு. இரவில், தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை, இருட்டறையில் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கும் நேரத்தில் தான், 'மெலடோனின்' சுரக்கும். நம் உடலில் சுரக்கும் ஒவ்வொரு ஹார்மோனும், குறிப்பிட்ட உடல் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.
செல்கள் புதுப்பித்தல் உட்பட, உடலின் உள் செயல்பாடுகளில் தேவைப்படும் சீரமைப்பு, மெலடோனின் சீராக சுரக்கும் போது நடைபெறும். வாழ்க்கை முறை மாற்றத்தால், 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு வேலை நேரம் மாறி விட்டது; இரவு முழுவதும் வேலை செய்கின்றனர்.
பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் பெண்கள், இரவு வெகு நேரம் விழித்திருந்து, லேப் - டாப், மொபைல் போன் என, மூழ்கி விடுகின்றனர்; இதனால், உடலில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு, இளம் வயதிலேயே மார்பக கேன்சர் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகி உள்ளன.
சென்னை அரசு பொது மருத்துவமனையில், ஒவ்வொரு ஆண்டும், புதிதாக, 2,500 கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வருகின்றனர். இவர்களில், 13 சதவீதம் பேர், மார்பக கேன்சர் உடையவர்கள்.
டாக்டர் கலைச்செல்வி,
புற்றுநோய் சிகிச்சை நிபுணர், சென்னை.
kalaikannan6000@gmail.com

