தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தைக்கு நேரிடும் திடீர் இறப்பு

குழந்தைக்கு நேரிடும் திடீர் இறப்பு

குழந்தைக்கு நேரிடும் திடீர் இறப்பு


PUBLISHED ON : டிச 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் குழந்தைக்கு 11 வயதாகிறது. அவனுக்கு நீரிழிவு நோய் உள்தாக மருத்துவர் கூறினார். இது ஆபத்தானதா?

குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோய் டைப் 1 வகையை சேர்ந்தது. பெரியவர்களுக்கு வரும் நீரிழிவு நோய் டைப் 2 வகையை சேர்ந்தது. டைப் 1 வகையில் குழந்தைகளுக்கு இன்சுலின் குறைவாக சுரக்கும். டைப் 2 வகையில் இன்சுலின் சரியாக சுரந்தாலும், அது சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்தாது.

குழந்தைகளுக்கு வரும் நீரிழவு நோய்கள்:

இன்சுலின் குறைவாக சுரப்பதால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் தேவைப்படுகிறது. இதை ஊசி மூலம் மட்டுமே செலுத்த முடியும். மருத்துவர்களும், செவிலியர்களும் எவ்வாறு இன்சுலின் ஊசி செலுத்துவது என கூறுவர். அதன்படி இன்சுலின் ஊசி எடுத்து கொள்ள வேண்டும்.

இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சில சமயங்களில் மூன்று மாத சர்க்கரையின் அளவை மருத்துவர்கள் எச்.பி.ஏ 1சி என்ற பரிசோதனை மூலம் சரி செய்வார்கள்.

இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சில சமயங்களில் மூன்று மாத சர்க்கரையின் அளவை மருத்துவர்கள் எச்.பி.ஏ. 1சி என்ற பரிசோதனை மூலம் சரி செய்வார்கள்.

இன்சுலினும், சர்க்கரையின் அளவும் நாம் உட்கொள்ளும் உணவை சார்ந்தது என்பதால் மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் இதற்கான ஒரு கால அட்டவணையை தயார் செய்து கொடுப்பர்.

குழந்தைகளும், பெரியவர்களும் இவ்வட்டவணையை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரையின் மாறுதல்களில் இருந்து காத்துக் கொள்ளலாம். இந்த அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நோயில் இருந்து விடுபட்டு பிற குழந்தைகள் போல் வாழ முடியும்.

உறவினர் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது குழந்தைகளுக்கு ஐந்து மாதம் ஆகிறது. இரவு தூங்கிய பின் ஒரு ழந்தை சடலமாக இருந்தது இதற்கு என்ன காரணம்?

நீங்கள் கூறுவது போல் திடீரென குழந்தை இறப்பு என்பது நோய்க்குறியாக தெரிகிறது. இது ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும். பொதுவாக இரவு 12:00 முதல் காலை 6:00 மணிக்குள் இது நிகழும்.

ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது அதிகளவு தாக்கும் என மருத்துவ ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு சரியான காரணம் கண்டறியப்படவில்லை எனினும் சில ஆபத்து காரணிகள் கூறப்படுகின்றன. அவை, குப்புறப்படுத்து உறங்கும் குழந்தைகள், மெத்தை, ஷோபாவில் உறங்கும் குழந்தைகள், பொம்மைகள், போர்வைகள், தலையணைகளுடன் தூங்கும் குழந்தைகள், இறுக்கமாக உடையணிவது, மகப்பேறு காலத்தில் தாயாருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருத்தல்.

இளம் வயது தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றாமல் இருத்தல். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள். எடை குறைவான குழந்தைகள் போன்ற காரணிகள் கூறப்படுகின்றன.

இவ்வித இறப்பை தவிர்க்கும் முறைகள்

குழந்தையை நேராக படுக்க வைக்க வேண்டும். குழந்தையை கட்டிலில் படுக்க வைக்காமல் தொட்டிலில் படுக்க வைக்க வேண்டும். உறுதியான மேற்பரப்பில் படுக்க வைத்தல். தூங்கும் போது குழந்தையின் தலையை மூடக்கூடாது. இறுக்கமான உடைகளை குழந்தை தூங்கும் போது அணிவிக்கக்கூடாது. குழந்தையின் அருகில் தலையணை, போர்வை, பொம்மை போன்றவற்றை வைக்கக்கூடாது. தாய்ப்பால் புகட்ட வேண்டும். தாய்மார்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

டாக்டர் முருகன் ஜெயராமன்

குழந்தைகள் நல நிபுணர், மதுரை.

94864 67452


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us