தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கால்சியத்தை கிரகிக்க உதவும் சூரிய ஒளி!

கால்சியத்தை கிரகிக்க உதவும் சூரிய ஒளி!

கால்சியத்தை கிரகிக்க உதவும் சூரிய ஒளி!


PUBLISHED ON : செப் 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறந்தது முதல் 5 வயது வரை எலும்பு, மூட்டுகளில் ஏற்படும் தொற்று பற்றி அதிகம் தெரிவதில்லை. பிறந்தவுடன் குழந்தைகளுக்கு ஏற்படும் இது போன்ற தொற்று, தொப்புள் கொடி வழியே பரவும். சில சமயங்களில், அம்மாவின் பிறப்புறுப்பில் உள்ள தொற்று குழந்தையை பாதிக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும்; அதனால், தொற்று எளிதாக ஏற்படும். ஒரு வயது, 2 வயதில் ஜலதோஷம், காதில் சீழ், மார்பு சளி, சிறுநீர் தொற்று ஏற்பட்டால், பாக்டீரியா கிருமிகள் ரத்தத்தில் பரவி, எலும்பு, மூட்டுகளுக்கும் பரவலாம். ஒரு வயதிற்கு மேல், குழந்தை ஓடியாடி விளையாடும் போது கால்கள், பாதங்களில் அடிபட்டால் ஏற்படும் காயங்கள் வழியே கல், மண் உள்ளே செல்லும் கிருமிகள், ரத்தத்தில் கலந்து எலும்பு, மூட்டுகளையும் பாதிக்கலாம்.

எப்படி கண்டுபிடிப்பது?



கை, கால்களை உதைத்து விளையாடாமல் இருப்பது, அசையாமல் கிடப்பது, திடீரென்று நடக்க முடியாமல் போவது, மூட்டுகளை தொட்டவுடன் வலியால் அழுவது போன்றவை முக்கிய அறிகுறிகள்.

தொற்று காரணமாக, குழந்தையின் மூட்டுகளில் சீழ் பிடித்தால், 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்து, தேவையான சிகிச்சை தர வேண்டும். இல்லையென்றால், மூட்டு முழுதும் கெட்டுப் போகும் அபாயமும் இதில் உள்ளது.குழந்தை ஓடியாடி விளையாடுவது, அதிலும் சூரிய ஒளியில் விளையாடினால் தான் 'விட்டமின் - டி' கிடைத்து, கால்சியம் சத்தை முழுமையாக உடல் கிரகிக்கும். கால்சியம் நிறைந்த சமச்சீரான உணவை தினமும் குழந்தைக்கு தர வேண்டும்.

- பீடியாட்ரிக் நியூட்ரிஷன் இதழ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us