உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 11, 2016

அ நிறம் | அளவு
* தேநீர் மற்றும் சில உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் இஞ்சியில், 40 விதமான, 'ஆன்டி ஆக்சிடென்ட்'கள் உள்ளன.
* இஞ்சியில் உள்ள இந்த ஆன்டி ஆக்சிடென்ட், வயோதிகத்தை தாமதப்படுத்தி தோலுக்கு புத்துணர்வு தருகிறது.
* உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றுவதோடு, சீரான ரத்த ஓட்டத்திற்கு இஞ்சி உதவுகிறது.
* தோலின் வெளிப்புறத்தில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் கொப்புளங்கள், வெடிப்புகள், பருக்களை குணப்படுத்தும் தன்மை இஞ்சிக்கு உண்டு.
* வெட்டுக்காயத் தழும்புகளில் இஞ்சி விழுதை தொடர்ந்து தடவினால் தழும்புகள் மாறும்.
*அரைத்த இஞ்சி விழுதுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை தொடர்ந்து தோலில் தடவி வந்தால், நாளடைவில் தோல் பளபளப்பாக ஆரோக்கியமாக இருப்பதை காணலாம்.
டாக்டர் ரேச்சல், ஆயுர்வேத சிறப்பு மருத்துவர்.
