sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/இரும்பு சத்து குறைந்த மாநிலம் தமிழகம்!

இரும்பு சத்து குறைந்த மாநிலம் தமிழகம்!

இரும்பு சத்து குறைந்த மாநிலம் தமிழகம்!


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டி ல் உள்ள மொத்த பெண்களில், பாதிக்கும் மேற்பட்டோர். 'அனீமியா' எனப்படும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக, 'நேஷனல் பேமிலி ஹெல்த் சர்வே' என்ற, மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விபர பிரிவு வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வில், பாகிஸ்தான் தவிர, தெற்காசிய முழுதிலும் உள்ள கர்ப்பிணி பெண்களிடம் இந்த பாதிப்பு உள்ளது என்றாலும், இந்தியாவில் மிக அதிகம்.

பஞ்சாப், குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, பீஹார், மேகாலயா, உத்தர பிரதேசம், தமிழ கம் உட்பட, 15 மாநிலங்களில், பாதிக்கும் அதிகமான பெண்கள், ரத்த சோகை யால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழகத்தில், 55 சதவீத பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தினமும் 30 - 60 மி.கி., போலிக் மாத்திரை, 0.4 மி.கி., இரும்புச் சத்து மாத்திரை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது, உலக சுகாதாரயாக மையத்தின் பரிந்துரை என்று உள்ளது.

ரத்த சோகையில், இரும்புச் சத்து குறைவு, பி12 குறைபாடு, போலிக் அமில குறைபாடு என, மூன்று விதங்கள் உள்ளன. கரு வளர்ச்சி, நஞ்சு வளர்ச்சி, பிரசவ காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பிற்கு என்று, எல்லாவற்றிற்கும் இரும்புச் சத்து அவசியம்.

சராசரியாக இருக்க வேண்டிய, 12 கிராம் ஹீமோகுளோபின் இருந்தால் தான், பிரசவத்தின் போது ஏற்படும், 3 - 4 கிராம் இழப்பை ஈடு செய்ய முடியும். நம் நாட்டை பொறுத்தவரை, பெரும்பாலும், 10 கிராம் இரும்புச் சத்து தான் இருக்கிறது.

இரும்புச் சத்து, 12 -13 கி., இருக்கும் பெண்கள், மிக மிகக் குறைவு. தமிழகத்தில், 55 சதவீத கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு உள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால், வளர் இளம் பருவத்திலேயே, 65 சதவீத பெண்கள், இரும்புச் சத்து குறையுடனேயே இருக்கின்றனர்.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை, அம்மாவிடம் இருந்தே இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளும். அம்மாவிடம் போதுமான இரும்புச் சத்து இல்லை என்றால், குறை பிரசவம், கருச்சிதைவு, வயிற்றிலேயே குழந்தை இறப்பது, கர்ப்பத்திலேயே நஞ்சு பிரிவது, அம்மாவின் ரத்த அழுத்தம் அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

பி12 மற்றும் போலிக் அமில குறைபாட்டால் வரும் ரத்த சோகையால், முதுகு தண்டு வட குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடுகள் வரலாம். கரு உண்டாகி, முதல் ஐந்து வாரங்களில் மூளை, தண்டுவடம் உருவாக ஆரம்பித்து, 8 -10 வாரங்கள் முழுமையாக வளர்ச்சி பெற்று விடும். நரம்பு திசுக்கள் உருவாவதற்கு இவை மிக அவசியம்.

பிரசவ நேரத்தில் அம்மாவுக்கு வலிப்பு, மூச்சுத் திணறல், பிரசவமாகி ஆறு வாரங்கள் வரை, இடுப்பு எலும்பு தொற்று, இதயக் கோளாறு, இடுப்பெலும்பில் ரத்தக் கட்டி, இதயக் கோளாறு என்று ரத்த சோகையால், பல பிரச்னைகள் வரும்.

கர்ப்ப காலத்தில், எல்லா பெண்களும் கண்டிப்பாக இரும்பு மற்றும் போலிக் அமில மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அதனால் தான், சுகாதாரத் துறையில் இருந்தே, எல்லாப் பெண்களுக்கும் இரும்புச்சத்து, போலிக் அமில மாத்திரைகள் தருவதை கட்டாயமாக்கி இருக்கின்றனர்.

பிரசவ நேரத்தில் அம்மாவுக்கு வலிப்பு, மூச்சுத் திணறல், பிரசவமாகி ஆறு வாரங்கள் வரை, இடுப்பு எலும்பு தொற்று, இதயக் கோளாறு, இடுப்பெலும்பில் ரத்தக் கட்டி, இதயக் கோளாறு என்று ரத்த சோகையால், பல பிரச்னைகள் வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us