தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/உபாதைக்கு டாடா சொல்லும் சப்போட்டா!

உபாதைக்கு டாடா சொல்லும் சப்போட்டா!

உபாதைக்கு டாடா சொல்லும் சப்போட்டா!


PUBLISHED ON : மே 14, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலுக்கு பளபளப்பு தந்து, முகத்தை பொலிவுடன் அழகாக வைப்பதில் சப்போட்டா பழம் சிறந்து விளங்குகிறது. பழத்தில், வைட்டமின் 'ஏ' அதிகம் இருப்பதால், பார்வையை பலப்படுத்துவதோடு, முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை தருகிறது. இருதயம் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

பழச்சாறுடன், தேயிலை சாறும் சேர்த்துப் பருகினால், ரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு டம்ளர் சப்போட்டா சாறு குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும். சப்போட்டா சாறில், தேனில் கலந்து சாப்பிட்டு வர, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி போன்றவை நீங்கும். சப்போட்டா பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி, ஒன்றாக கலந்து அரைத்து, பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும், உறுதியும் கிடைக்கும். சப்போட்டா, கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாக கலந்து அத்துடன் தேன் சேர்த்து, சாறாக குடித்தால், எலும்புகள் உறுதியடையும்.

சுறுசுறுப்புக்கு உறுதி: அதிகளவு ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா. குளுக்கோஸ் அதிகம் இருப்பதால், நம்மை, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். விளையாட்டு வீரர்களுக்கு, இது மிகுதியான உற்சாகத்தை தரக்கூடியது.

இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை தருகிறது. பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்கும் வைட்டமின் 'ஏ' இருப்பதால், பிரச்னைகளுக்கு விடுதலை கிடைக்கும். எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துகள் அதிகளவு உள்ளன. தொடர்ந்து சாப்பிடுவதால், எலும்புக்கு வலுக்கிடைக்கும். நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை அகன்று போகும்.

பழத்தை சாப்பிட்ட பின், ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பழத்தை சாறாக எடுத்து, சிறிது சுக்கு, சிற்றரத்தை பொடித்து கலந்து அருந்தலாம். பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை; ரத்த நாளங்களில், கொழுப்பு படிவதை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

வராது குடல்புற்று: கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது. இருதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப, பாதுகாக்கும் தன்மையும் இப்பழத்துக்கு உண்டு. சப்போட்டா பழ சாறு, கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணம், தாகத்தை குறைக்கும். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள், சப்போட்டா பழச்சாறு குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வந்தால், காசநோய் குணமாகும். மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக, ரத்த மூலம் உள்ளவர்களுக்கு, இப்பழம், எளிய இயற்கை மருந்து.

இப்பழத்தை, அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால்,

எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா சாறுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால், சளி குணமாகும். அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும். பழத்தை, தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றைப் போக்கும். பழத்தை தோல் நீக்கி, பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us