
மனித, மனம் எந்த விஷயத்தை தீவிரமாக விரும்புகிறதோ, அதன் பொருட்டு காதல்
கொள்வது இயல்பு. அதுவே பைத்தியக்காரத்தனமாக மாறினால், உடலில், தான் விரும்பும் உருவப்படங்கள் மற்றும் பெயர்களை 'டாட்டூ'வாக குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு பச்சைக் குத்திக் கொள்வது சரிதானா? விருப்பத்திற்காகவும், ஸ்டைலுக்காகவும் 'டாட்டூ' குத்திக்கொள்வது ஆபத்தானது.
'டாட்டூ' குத்தும்போது, ஒருமுறை பயன்படுத்திய ஊசியை, மறுமுறை உபயோகிக்கும் போது, நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு எச்.ஐ.வி., கூட பரவியிருக்கிறது.
பல வண்ணங்களில், 'டாட்டூ'க்கள் குத்த, ரசாயன சாயங்கள் உபயோகிக்கப்படுகின்றன. அதனால், தோல் அழற்சிகள் ஏற்படுகின்றன. 'டாட்டூ'க்கள் குத்துவதால், தோலில் வடுக்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலானோருக்கு, 'டாட்டூ' ரசாயன சாயத்தை அழிக்கும்போது தான் வடுக்கள் ஏற்படுகின்றன.
'டாட்டூ' குத்த பயன்படுத்தப்பட்ட 'ஸ்டெர்லைட்' ஊசியில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்கள் மூலம், தோல் தொற்று நோய்கள் ஏற்படலாம். தோல் வீக்கம், வலி, சிவந்து தடித்தல் போன்றவை நோய் தொற்றுக்கு அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தோன்றுவதற்கே, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என்பது, குறிப்பிடத்தக்கது.
'டாட்டூ' குத்திய இடத்தில், நிரந்தரமாக தோல் நிறம் மாறிவிடும் வாய்ப்பிருக்கிறது. நிறைய ஆண்டுகளுக்கு பின், இந்த நிறம் மாற்றம் குறையலாம். 'டாட்டூ' குத்துவதற்கு முன், இதை எல்லாம் மனதில் வைத்து கொள்வது அவசியம். பச்சை குத்தியோர், ஒரு வாரத்திற்கு ரத்த தானம் செய்யக்கூடாது. நோய் தொற்று அபாயம் இருப்பதால், இது தவிர்க்கப்படுகிறது.
'டாட்டூ' குத்தும் போது, ரத்த நாளங்களில் ரத்த கட்டிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. நிணநீர் அமைப்பில் வீக்கம் அல்லது கட்டிகள் ஏற்படலாம்.
- சம்பத் கிருஷ்ணமூர்த்தி, சரும நிபுணர்.
94440 75587