sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

/

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்


PUBLISHED ON : மார் 09, 2016

Google News

PUBLISHED ON : மார் 09, 2016


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூக்கமின்மை என்றால் என்ன?

உடலின் ஆரோக்கியமான செயல் திறனுக்காக, 'ஹார்மோன்' மாற்றங்களால் நிகழ்வதே தூக்கம். இந்நிகழ்வு நடக்காமல் போவதே தூக்கமின்மை.

தூக்கமின்மை வரக் காரணம்?

மன அழுத்தமே முக்கிய காரணம். அதோடு, மாறிவரும் வாழ்க்கை முறை. உணவுப் பழக்கம், பணியிட நெருக்கடி, கவலை, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வுகளும் காரணம். உடல் உறுப்பில், ஏதேனும் வலி இருந்தாலும், தூக்கமின்மை ஏற்படும்.

தூக்கமின்மையின் அறிகுறிகள்?

அதிகாலையிலேயே விழிப்பது, தூக்கத்திற்கு பின்னும் அசதியாக இருப்பது, சோர்வாக உணர்தல், எரிச்சலான மனநிலை, எதிலும் கவனமின்மை மற்றும் ஆர்வம் குறைந்த நிலை, தலைவலி, செரிமானக் கோளாறுகள் தூக்கமின்மையின் அறிகுறிகள்.

தூக்கம் உடலுக்கு அத்தியாவசியத் தேவையா?

தூங்கும்போது, மூளையில், மெலோடனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதனால், உடல் தசைகள், எலும்புகள் மட்டுமின்றி, மனநலமும் காக்கப்படுகிறது. தூக்கத்தால் உடல் சோர்வு, மன சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.



நீண்ட நாட்களாக, ஒருவர் தூக்கமின்மையில் இருந்தால், வரும் பாதிப்புகள் என்ன?


மூளைக்கும், உறுப்புகளுக்குமான தகவல் தொடர்பு சிதையும். அதிகப்படியான தசைச் சோர்வு, கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். செரிமான மண்டலம் பாதிக்கப்படும். எரிச்சலுடன் பேசுவது, காதுகளில் கற்பனை ஒலிகள் கேட்பது, ஞாபக

மறதி போன்றவையும், தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் தான்.

குறுகிய கால தூக்கமின்மைக்கும், நீண்டகால தூக்கமின்மைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இரண்டு வார காலத்திற்கும் மேல் தூக்கம்இல்லாமல் இருப்பது, குறுகிய கால தூக்கமின்மை; இதை, எளிதில் குணப்படுத்தி விடலாம். தூக்கமின்மை ஒரு மாத காலத்திற்கும் மேல் நீடித்தால், அது நீண்டகால தூக்கமின்மை. இப்பாதிப்பில் உள்ளவர்களுக்கு, மனச் சோர்வு நோய் இருக்கும். எந்நேரமும், அர்த்தமில்லாத பயத்தில் தவிப்பர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யாருக்கு எவ்வளவு தூக்கம் தேவை? புகைப் பழக்கம் எவ்வாறு தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது?

புகையிலையில் இருக்கும், 'நிகோட்டின்' தூக்கத்திற்கு முதல் எதிரி. இது புகை வழியாக, ரத்தத்தில் கலந்து, மூளையை அடைந்து, சில மணி நேரங்களுக்கு மூளையை தூங்க விடாமல் செய்வதால், தூக்கமின்மை ஏற்படுகிறது. மது அருந்துபவர்கள், அதை, அருந்தியவுடன் தூங்கி விடுகின்றனரே;

இவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுமா?

மது அருந்துவதால் ஏற்படுவது மயக்கம் தானே தவிர, தூக்கம் இல்லை. மதுவிலுள்ள, 'எத்தில் ஆல்கஹால்' மூளையின் நுண் நரம்புகளை சேதமடையச் செய்து, மூளையை செயற்கையாக முடக்கி விடுகிறது. மது அருந்துபவர்களுக்கு, கட்டாயம் தூக்கமின்மை ஏற்படும்.

தூக்கமின்மைக்கான மருத்துவ தீர்வுகள் என்னென்ன?

மூளையில் ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வினால் மனச் சோர்வு, மனப் பதற்றம் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு, உளவியல் சிகிச்சை மூலம், மூளையில் சுரக்கும் ஹார்மோன்களை சமன் செய்வதன் மூலம், சரி செய்யலாம். உடல் நலக் கோளாறு காரணம் என்றால், அதற்குண்டான சிகிச்சை செய்தாலே, தூக்கமின்மையை போக்கலாம்.

- த.ரவி சாமுவேல்

மனநல ஆலோசகர்,சென்னை

044 - 2433 7439






      Dinamalar
      Follow us