தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜூலை 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எண்டோஸ்கோபி' என்றால் என்ன?

உடலில் இயற்கையாக உள்ள துவாரங்கள் வழியே மிகச் சிறிய ஒயர் போன்ற கருவியை செலுத்தி, அதன் மூலம், உடல் உள் உறுப்புகளின் பிரச்னைகளையும், நோய் பாதிப்புகளையும் கண்டறிய உதவும் கருவி, 'எண்டோஸ்கோபி!'



எந்தெந்த உள் உறுப்புகளை எண்டோஸ்கோபி மூலம் பார்க்க முடியும்?


இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், பித்தப்பை போன்ற உறுப்புகளைப் பார்க்கலாம்.

கர்ப்பப்பை பிரச்னைகளைத் தீர்க்க பிரத்யேக கருவிகள் உள்ளதா?

கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள உறுப்புகளைப் பார்க்க உதவுவது, 'லேப்ரோஸ்கோபி!' கர்ப்பப்பைக்கு உள்ளே பார்க்கக் கூடியது, 'ஹிஸ்டரோஸ்கோபி!' என, இருவித கருவிகள் உள்ளன.

லேப்ரோஸ்கோபி சிகிச்சையில், எவ்வகையான கர்ப்பப்பை பிரச்னைகளை தீர்க்க முடியும்?

சினைப்பை மற்றும் கர்ப்பப்பையில் பிரச்னை உள்ளதா என்பதை பார்க்க முடியும். ஹிஸ்டரோஸ்கோபியில், பிறப்புறுப்பு வழியாக எண்டோஸ்கோபி குழாயை செலுத்தி, அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

எண்டோஸ்கோபிக்கும், லேப்ரோஸ்கோபிக்கும் என்ன வேறுபாடு?

உடலின் இயற்கையான துவாரங்கள் வழியே, உள்உறுப்புக்களை காண உதவும் கருவி எண்டோஸ்கோபி. மிகச் சிறிய துளை மூலம் உடலினுள் செலுத்தி, அறுவை சிகிச்சை செய்ய பயன்படுவது லேப்ரோஸ்கோபி.

திறந்த நிலை அறுவை சிகிச்சைக்கும், லேப்ரோஸ்கோபி முறைக்கும் என்ன வித்தியாசம்?

திறந்த நிலை அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட இடத்தை திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதில், அதிக ரத்த இழப்பு, நோய் தொற்று ஏற்படலாம். ஆனால், லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையில் சிறிய துளை மட்டுமே போடப்படுவதால், குணமாகும் நாட்கள்,

ரத்த இழப்பு, நோய்த் தொற்று மிகக் குறைவு.

லேப்ரோஸ்கோபி சிகிச்சையின் போது தையல் போடப்படுமா?

தேவை ஏற்பட்டால் ஒரே ஒரு தையல் போடப்படும். பெரும்பாலும், ஒரு சின்ன, 'பிளாஸ்டர்' மட்டுமே ஒட்டப்படும். தற்போது, 'ஜெல்' மூலமும் அத்துவாரம் அடைக்கப்பட்டு விடும்.



லேப்ரோஸ்கோபி முறையில், குடல்வால் பிரச்னையை தீர்க்க முடியுமா?


லேப்ரோஸ்கோபியை வயிற்றுக்குள் செலுத்தி, பாதிக்கப்பட்ட குடல்வாலை அகற்றி விடலாம்.

மூலநோயையும் லேப்ரோஸ்கோபி மூலம் சரி செய்ய முடியுமா?

மூலநோயை லேப்ரோஸ்கோபி மூலம், சரிசெய்ய முடியாது. ஆனால் நவீன சிகிச்சை முறைகளான, 'ஸ்டேபளர்' மற்றும், 'லேசர்' முறையை பயன்படுத்தி

மூலநோய்க்கு தீர்வு காணலாம்.

லேப்ரோஸ்கோபி சிகிச்சையின் மூலம், எம்மாதிரியான அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும்?

கர்ப்பப்பை மற்றும் சினைப்பைக்குள் உருவாகும் சிறிய கட்டிகள், நீர்க்கட்டிகளை அகற்றலாம். கர்ப்பப்பையை அகற்றுவது, குடும்பக் கட்டுப்பாடு

அறுவை சிகிச்சையும் செய்யலாம்.

மா.வெங்கடேசன்,

குழந்தைகள் நல அறுவை சிகிச்சை மற்றும்

எண்டோஸ்கோபி நிபுணர்.

98402 43833

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us