தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்


PUBLISHED ON : நவ 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு?

பொதுவாகவே, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். அதிலும் ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைந்த குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த குழந்தைகளும் அப்படித்தான்.

குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகள்?

பி.சி.ஜி., காசநோய், நிமோனியா, ப்ளூ காய்ச்சல், அம்மைத் தடுப்பூசி, ஹெப்படைட்டிஸ் ஏ மற்றும் பி, வைரஸ் மூளைக்காய்ச்சல் போன்ற தடுப்பூசிகள் போடலாம். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தர வேண்டியது அவசியம்.

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடலாமா?

எல்லா தடுப்பூசிகளையும் போட வேண்டியது முக்கியம். கதிர்வீச்சு சிகிச்சையின் போது, நுண்ணுயிர்த் தடுப்பூசிகளை போடக் கூடாது. சிகிச்சைக்குப் பின் வீரியம் குறைந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.

ஹீமோபீலியாவிற்கு தடுப்பூசி உள்ளதா?

ஹீமோபீலியாவிற்கு தடுப்பூசி இல்லை. வழக்கமாக, ரத்த உறைவுக்காக மருந்துகளை எடுத்துக் கொண்ட உடனே, தசை வழித் தடுப்பூசிகளை மட்டும் போட வேண்டும்.

எடை குறைந்த குழந்தைகளுக்கு பிரத்யேக தடுப்பூசிகள் உள்ளதா?

குழந்தை, 2 கிலோவுக்கு மேல் இருந்தால், எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ளலாம். 2 கிலோவிற்கு குறைவாக இருந்தால், ஹெப்படைட்டிஸ் பி தடுப்பூசியை ஒரு மாதம் கழித்து போடலாம்.

தாய்க்கு ஹெப்படைட்டிஸ் பி பாதிப்பு இருந்தால், குழந்தைக்கு தடுப்பூசி அவசியமா?

குழந்தையின் எடை, 2 கிலோவுக்கும் குறைவாக இருந்தால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகள்?

அம்மை தடுப்பூசிகளை போடக் கூடாது. கர்ப்பிணிகளுக்கு ஹெப்படைட்டிஸ் பி, மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான தடுப்பூசிகள் போட வேண்டும்.

நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் என்ன?

சிறுநீரகங்கள், இதய நோய், நுரையீரல், கல்லீரல், நரம்பு பாதிப்பு இருந்தால், தொற்று நோய் அபாயம் அதிகம். இவர்களுக்கு சில தடுப்பூசிகளை சற்று கூடுதலாக போட வேண்டும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் என்ன?

உறுப்பு மாற்று சிகிச்சை துவங்குவதற்கு, 15 நாட்களுக்கு முன், தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும். 6 மாதங்களுக்கு பின், வழக்கமாக போடப்படும் அனைத்து தடுப்பூசிகளையும் போடலாம்.

தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்படுமா?

முதல் முறை தடுப்பூசி போடும் போது, ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு, தடிப்பு, வாந்தி மூச்சுத்திணறல் மயக்கம் வலிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டு இருந்தால், மீண்டும் தடுப்பூசிகளை போடக்கூடாது.

சுந்தரமூர்த்தி

குழந்தைகள் நல நிபுணர்

கோவை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us