தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜன 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சேற்றுப்புண் என்றால் என்ன?

காலில் உள்ள விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தோல் சுருங்கி, வெண்மை படர்ந்து, அழுக்கு போல் காணப்படுவது பூஞ்சை தொற்று. இதில், சற்று அரிப்பும், துர்நாற்றமும் இருந்தால், சேற்றுப் புண் எனப்படும்.

2. காரணம் என்ன?

மழைநீர், சேறு, சுகாதாரமற்ற தண்ணீர் ஆகியவற்றில், நீண்ட நேரம் நிற்பது, செருப்பு அணியாமல் கரடு, முரடான பாதையில் நடப்பது, தரமற்ற செருப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது, பாதங்களை அழுக்கு போக தேய்த்துக் குளிக்காதது, உடல் எடை அதிகமாக இருப்பது போன்றவை, இதற்கு காரணமாக இருக்கலாம்.

3. மேற்சொன்னவை மட்டுமே சேற்றுப்புண் ஏற்பட காரணமா?

அதுமட்டுமல்ல, வெளியில் சென்று வருபவர்கள், தோட்ட வேலை, வீட்டு வேலை செய்பவர்கள், கை, கால்களை சுத்தமாகக் கழுவாததாலும், நாள்பட்ட நோய்கள், வைட்டமின் சத்து குறைவு, மருந்து ஒவ்வாமை, தொற்றுநோய் கிருமிகள், தீராத மலக்கட்டு போன்றவை இருந்தாலும், சேற்றுப் புண், பித்த வெடிப்பு ஏற்படலாம்.

4. தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேற்றுப்புண் வருமா?

'சொரியாசிஸ்' என்ற காளான் பூஞ்சை படை தோல் நோய், கரப்பான், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேற்றுப்புண் வரலாம்.

5. நோய் அறிகுறி?

கால் ஓரங்களில் வெடிப்பு, புண், தடிப்பு, குறிப்பாகக் குதிகால் வெடிப்பு, புண், நடந்தால் தாங்க முடியாத வலி, குத்தல், நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் செருப்பு இல்லாமல் நடக்க இயலாமை, செருப்பு போட்டாலும் ஒரு சிலருக்குத் தாங்க முடியாத வலி, வேதனை, சில நேரங்களில் வெடிப்பிலிருந்து ரத்தம் வருதல், கைவிரல், கால் விரல் இடுக்குகளில் புண், வலி, நீர் வடிதல், நெறி கட்டுதல், சுரம், ஒருவித துர்நாற்றம் போன்றவை அறிகுறிகள்.

6. வராமல் தடுப்பது எப்படி?

வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும். குளிக்கும்போது கால்களை சுத்தமாக தேய்த்து குளிக்க வேண்டும். மலம், ஜலத்தை ஒழுங்காக வெளியேற்ற வேண்டும். கரடு, முரடான பாதையில், காலணி இல்லாமல் நடப்பதைத் தவிர்க்கவும். தரமான காலணிகளை அணிய வேண்டும்.

7. சேற்றுப்புண் வருவதை தடுக்க, உணவு முறை அவசியமா?

சத்துள்ள காய், கீரை, பயறு, பழ வகைகளைத் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். தோல் நோய், வேறு நோய்கள் இருந்தால், முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்கவும், உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும், ஒழுங்குமுறையைக் கடைபிடிக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான முறையில் உணவை உட்கொள்வதால் தொற்று நோயிலிருந்தும், சேற்றுப்புண், பித்த வெடிப்பு வராமலும் தடுக்கலாம்.

8. மருந்துகள் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்?

சர்க்கரை நோய், தைராய்டு, உடல் பருமன், தொற்று நோய், சத்துக் குறைபாடு போன்றவற்றுக்கு, உரிய சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடுகளுடன் மருந்தையும் உட்கொள்ள வேண்டும். சேற்றுப்புண், பித்தவெடிப்புக்கு உள்மருந்து எடுத்துக்கொள்ளும் முன், தமிழ் வைத்தியர்களின் கூற்றுப்படி, ஆண்டுக்கு இருமுறை பேதி மருந்து சாப்பிட்டு, வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

9. உள் மருந்து?

முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தைச் சமநிலை படுத்தக்கூடிய மருந்துகளைப் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆவாரம் பூ, ரோஜா மொட்டு, கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கசகசா, பூலாங்கிழங்கு, சந்தனம் சேர்ந்த மருந்து, பரங்கிப்பட்டை சேர்ந்த மருந்து, அன்னபேதி, நற்பவளம் சேர்ந்த மருந்துகள் நல்ல பலனைத் தரும்.

10. வெளி மருந்து?

கிளிஞ்சல், நெல்லிக்காய், சிற்றாமணக்கு நெய் சேர்ந்த மருந்து, வங்கச் செந்தூரம், மயில்துத்தம், வெண்ணெய் சேர்ந்த மருந்து, வீரம், நெய் சேர்ந்த மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்து, படிகார நீர் போன்ற வெளிப்பூச்சு மருந்துகள் பயன்படுத்தினாலும், சேற்றுப் புண், பித்த வெடிப்பு விரைந்து குணமாகும்.

- வே.இளங்கோவன்,

சித்த மருத்துவர்.

திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us