sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : மார் 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 30, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சன் ஸ்ரோக்' என்றால் என்ன?

கடுமையான சூரியஒளி தாக்கத்தால் ஏற்படக் கூடிய மயக்கத்தையே, 'சன் ஸ்ரோக்' அல்லது, 'ஹீட் ஸ்ரோக்' என்கிறோம்.

இது எதனால் வருகிறது?

கடுமையான வெப்பம், நேரடியாக நம்மீது படும்போது, மூளையின், 'கேலாமஸ்' பகுதியின் அருகில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்தும் மையம் செயலிழந்து விடுகிறது. அதிகபட்சமாக, 105 டிகிரி வரையிலும் உஷ்ணத்தை கட்டுப்படுத்தக் கூடியது, இந்த மையம். அதற்கு மேல் போகும்போது, 'அல்புமின்' எனும் ஒரு வகை புரதச்சத்து, கெட்டியாகி ரத்தம் உறைந்து விடும். இதனால், 'சன் ஸ்ரோக்' வரும்.

இதன் அறிகுறிகள் என்ன?

வியர்வை இருக்காது; குமட்டல், வாந்தி, அதிக உடல் உஷ்ணம், பேச்சு குளறுவது, நிதானமின்மை, வலிப்பு வருதல், தோல் வறண்டு போதல் போன்றவையே.

'சன் ஸ்ரோக்' தாக்கினால், உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்?

உடலிலுள்ள நீர் வற்றிப்போகும். குறிப்பாக, திசுக்களிலுள்ள நீர் வற்றி, மூளை செயலிழந்து மயக்கம் வரும்.

இப்பிரச்னை யாருக்கெல்லாம் வரும்?

50 வயதுக்கு மேற்பட்டோர், விளையாட்டு வீரர்கள், மது அருந்துவோர், சூரிய ஒளியில் வேலை செய்வோர், இதயநோய்க்காக மருந்து எடுத்துக் கொள்வோர், குறிப்பாக, 'பீட்டா பிளாக்கர்ஸ்' மற்றும், 'டையோரிட்டிக்ஸ்' பாதிப்புள்ளவருக்கு, 'சன் ஸ்ரோக்' ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் பாதிப்புகள் என்ன?

உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் செயலற்றுப் போகும். இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். சிறுநீரகத்தின் செயல்திறன் குறைவதால், சிறுநீர் குறைவாக வெளியேறும். நுரையீரலில் மூச்சுக்காற்று வேகமாகவும், ஆழமற்றும் மேல்நோக்கிய மூச்சு காற்று இருக்கும். தசைகள்

வலுவிழந்து அழிந்து போக வாய்ப்புண்டு.

'சன் ஸ்ரோக்'கினால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதா?

மேற்சொன்ன கேலாமஸ் பகுதியின் அருகிலுள்ள வெப்பத்தை கட்டுப்படுத்தும் மையம், 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சென்றால், ரத்தத்திலுள்ள, 'அல்புமின்' எனும் புரதச்சத்து, கெட்டித்து விடும். அதனால், ரத்த ஓட்டம் குறைந்து, உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

'சன் ஸ்ரோக்'கினால் மூளை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

வெப்பச் சலன கட்டுப்பாட்டு அறையின் செயலிழப்பால், மூளையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வலிப்பு, சீரற்ற மனநிலை ஏற்படுவதால் மூளை பாதிக்கப்படுகிறது.

இதை தடுப்பது எப்படி?

சூரிய ஒளியில் அதிகம் நேரம் வேலை செய்யக் கூடாது. அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். தேவைக்கேற்றவாறு, தண்ணீர் பருக வேண்டும். மது மற்றும் சர்க்கரை அதிகமுள்ள பானங்களை அருந்தக் கூடாது. கோடை காலத்தில், பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். இதய நோய் உள்ளவர், சூரிய வெப்பத்தை தவிர்ப்பது நல்லது.

'சன் ஸ்ரோக்'கிற்கான சிகிச்சை என்ன?

இதற்கு சிகிச்சையை காட்டிலும், முதலுதவி அவசியம். இறுக்கமான ஆடைகளை அணிந்திருந்தால், தளர்த்த வேண்டும். காற்றுப்படுமாறு பாதிக்கப்பட்டோரை படுக்க வைக்க வேண்டும். துணியை குளிர்ந்த நீரில் நனைத்து தலை, அக்குள், மார்பு, தொடை போன்ற

இடங்களில் போட வேண்டும். முதலுதவிக்கு பின், மருத்துவரை அணுகுவதே நல்லது.

- எஸ்.எம்.ராஜேந்திரன்

பொது மருத்துவம் மற்றும் நீரிழிவு சிறப்பு நிபுணர்,

ஓய்வு பெற்ற மருத்துவர்,

ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை, சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us