sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : பிப் 22, 2017

Google News

PUBLISHED ON : பிப் 22, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சில பெண்கள் ஆண் குரலிலும், சில ஆண்கள் பெண் குரலிலும் பேசுவதுண்டு. இது போன்ற குரல் மாற்றம் ஏற்படுவது ஏன்?எல்லா ஆண்களுக்கும், 14 வயது வரை பெண் குரல் தான் இருக்கும். 14 வயதில் குரல்வளையானது விரிவடைந்துவிடும். இதுதான் குரல் உடைவது என்று சொல்லப்படுகிறது. இதன் விளைவாகவே, அவர்களுக்கு கழுத்தில் உள்ள தைராய்டு கார்டிலேஜ் எனப்படும் குருத்தெலும்பு புடைத்து வெளிப்படையாகவே தெரியும்.

இப்பிரச்னையை சரிசெய்ய தீர்வுகள் உண்டா? குரல்வளையை இழுத்து விட்டு சரிசெய்ய, பல நவீன சிகிச்சைகள் உள்ளன. எண்டோஸ்கோப் துணையுடன் எளிமையாக சிகிச்சை செய்து, இந்த பிரச்னையை சரிசெய்து விடலாம். பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை தேவைப்படாது.

பெண்களுக்கும் இப்பிரச்னை ஏற்படுமா?ஆண்களுக்கான ஆண்ட்ரோஜென் ஹார்மோன், பெண்களுக்கு அதிகமாக சுரந்தால், குரல் கடினமாவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

குரல் நன்றாக வர, என்னென்ன பயிற்சிகள் உள்ளன? தொண்டையை தளர்வடையச் செய்து பேசும்போது, கொட்டாவி விட்டு பேச வேண்டும். அசைபோட்டுக் கொண்டே பேச வேண்டும். குரல் நாணை பேசுவதற்கு தயார் செய்து, முணுமுணுக்க வேண்டும். தொண்டையில் கருவி மூலம், அதிர்வு ஏற்படுத்த வேண்டும். உரையாடும் போது, எச்சிலை விழுங்கிக் கொண்டே இருக்க வேண்டும். தொண்டையை விரலால், நெருடிக் கொண்டே பேச வேண்டும்.

இப்பயிற்சிகள் தவிர வேறு ஏதும் சிகிச்சைகள் உள்ளதா?மேற்சொன்ன பயிற்சிகளைத் தவிர, தொண்டையில் எண்டோஸ்கோப் செலுத்தி, சில உபகரணங்கள் மூலம், குரல் நாணை தளர்வடையச் செய்யும் அறுவைச் சிகிச்சையும் உண்டு.

அறுவைச் சிகிச்சைக்கு பின், குரல் மாற்றம் சீராகுமா?தொண்டை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் நிரந்தரமாக பேச்சுப்பயிற்சி அளிக்க வேண்டும்.

புதிய மருத்துவ சிகிச்சைகள் உள்ளதா?அண்ணச் சதையை முடிச்சுப் போட்டு இழுக்கும் போது, குரல் நாண் தளர்வடைந்து, பெண்குரல் ஆண்குரலாகிறது. குட்டி நாக்கில் தான், இந்த முடிச்சு ஒரு வார காலம் இருக்கும். இதனால், வாயை நன்கு திறந்து தான் பேச வேண்டும்.

குரல் வளையில் முடிச்சு போடும் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனையில் தங்க வேண்டுமா?குரல் உறுப்பில் முடிச்சு போடுவதற்கு முழு மயக்கம் தேவை இல்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. வெளி நோயாளி பிரிவிலேயே வைத்து போட்டு விடலாம்.

அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன், என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். பொதுவான சில ரத்தப் பரிசோதனைகளும் செய்ய வேண்டும். ஏனெனில், 90 சதவீதம் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், ஆண் தன்மைக்குண்டான ஹார்மோன் அதிகம் சுரக்கிறதா அல்லது பெண் தன்மைக்குண்டான ஹார்மோன் அதிகம் சுரக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

வேறு என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?அடிரோஸ் கோப் மூலம், குரல் நாணின் அதிர்வுகளை கணக்கிட வேண்டும். ஸ்பெக்டோ கிராம் மூலம், குரல் நாண், நாக்கு, அண்ணம் ஆகியவற்றில் உருவாகும் ஒலியை கணக்கிட வேண்டும். அறுவைச் சிகிச்சைக்கு முன்னும், பின்னும் செய்ய வேண்டும். சிகிச்சைக்கு பின், செய்யப்படும் பயிற்சிகளே நிரந்தரமான ஆண் குரலுக்கு வழிவகுக்கும்.

குமரேசன்,காது, மூக்கு, தொண்டை நிபுணர்,ராயப்பேட்டை,சென்னை.






      Dinamalar
      Follow us