sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பத்து கேள்விகளுக்கு பளிச் பதில்கள்

/

பத்து கேள்விகளுக்கு பளிச் பதில்கள்

பத்து கேள்விகளுக்கு பளிச் பதில்கள்

பத்து கேள்விகளுக்கு பளிச் பதில்கள்


PUBLISHED ON : நவ 19, 2014

Google News

PUBLISHED ON : நவ 19, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. மரபணுக்களுக்கும், பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தொடர்புண்டா?

நேரடியாக பற்சிதைவு, வாய்ப்புண், பற்களில் இரத்தம் வடிதலுக்கு தொடர்பில்லை. ஆனால் 32க்கும் குறைவான எண்ணிக்கையில் பற்கள் முளைத்தல், பற்களை தாங்கி நிற்கும் எலும்புகளில் உறுதியின்மை, பற்களின் வரிசை கோணலாக இருத்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, மரபணு குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

2. பற்சிதைவுக்கு பல் நீக்குவதுதான் தீர்வா?

பற்சிதைவு என்பது ஒரு காயம் மாதிரி! அதனால், முழுமையாக பற்களை அகற்றாமல் பற்களுக்கான வேர் சிகிச்சை மூலம் நோய்த்தொற்றுக்களை மட்டும் அகற்றி விட்டு, பற்களை பாதுகாக்கலாம். ஆனாலும், முழுமையாக சிதைந்துவிட்ட பற்களை அகற்றித்தான் ஆக வேண்டும். பற்களில் உணவுத்துகள்கள் தங்கிவிடாமல் பார்த்துக்கொண்டாலே, பற்சிதைவு ஏற்படாது.

3. இடைவெளியோடு பால் பற்கள் முளைப்பது குழந்தைகளுக்கு நல்லதா?

நிச்சயமாக! பால்பற்கள் விழுந்த பிறகு முளைக்கும் பற்கள் சற்று பெரியதாக முளைக்கும். அந்த சமயத்தில் தேவைப்படும் இடவசதியை ஈடுசெய்யவே, பால்பற்கள் இடைவெளியோடு முளைக்கின்றன. இடைவெளி இல்லாமல் பால் பற்கள் முளைத்து விட்டால், புதிய பற்கள் இடுக்குப்பற்களாக முளைத்து விடும்.

4. கடைவாய்ப்பல் பிரச்னை புற்றுநோய்க்கு வழிவகுக்குமா?

பொதுவாக கடைவாய்ப் பற்கள், அறிவுப்பற்கள் எனப்படும். குறிப்பிட்ட வயதில் முளைக்கும் இப்பற்களை எடுத்துவிடுவது நல்லது. சிலருக்கு இந்தப் பற்கள் சிறிதளவு முளைத்துவிட்டு, எலும்புகளுக்கு உள்ளேயே மீதி தங்கிவிடும். இதை உடனடியாக எடுத்துவிடுவது நல்லது. எடுக்காமல் விட்டால், எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

5. வாய் துர்நாற்றம் என்பது வயிற்றுப்புண்ணின் அடையாளம்தானே?

வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றுப்புண் மட்டும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம். மற்றபடி, வாயிலிருந்து வயிற்றுக்குள் நேரடியாக தொடர்பில் இருப்பது உணவுக் குழாய்தான். உணவுகள் செரிக்காமல் இரைப்பைக்குள் தங்கும்போது, துர்நாற்றம் வீசும். இதோடு, காலை, மாலை இருவேளையும் பல் துலக்காவிட்டாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும்.

6. மஞ்சள் நிற பற்களுக்கு வைட்டமின் குறைபாடுதான் காரணமா?

நிச்சயமாக இல்லை. 'ப்ளோரைடு' அதிகமாக உள்ள நீரை பயன்படுத்தினால், பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். மேலும், காபி, டீ, புகையிலை பழக்கம் இருந்தாலும், பற்கள் மஞ்சள் நிறமாகத்தான் இருக்கும். ஒரு குழந்தை கருவில் உருவாகும்போது, 'ப்ளோரைடு' நிறைந்த தண்ணீரை தாய் பருகினால், குழந்தைக்கு முளைக்கும் பற்கள் கறை படிந்துதான் இருக்கும்.

7. வீரியமுள்ள பற்பசைகளால் பற்களுக்கு ஆபத்து உண்டா?

ஓரிரு நாட்கள் பயன்படுத்தினால் ஆபத்தில்லை. தொடர்ந்து வருடக்கணக்கில் பயன்படுத்தினால் நிச்சயம் ஆபத்துதான்! மின்னும் பற்பசைகளில் 'அப்ரேசிவ்' எனப்படும் மூலக்கூறு உப்பு உண்டு. இதனால், பற்களின் 'எனாமல்' பாதிக்கும். இதை தொடர்ந்து பயன்படுத்தும்போது, பற்கூச்சம், பற்களில் வலி உள்ளிட்டவை ஏற்படும்.

8. பற்களின் இடைவெளியை சரிசெய்வது எப்படி?

குழந்தைகளின் பால்பற்களில் இடைவெளி என்றால் பிரச்னையில்லை. விழுந்து முளைத்த நிரந்தர பற்களில் இடைவெளியென்றால் கவனிக்க வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், பற்களின் இடைவெளியை சரி செய்ய 'கிளிப்' போட்டுக் கொள்ளலாம். இடைவெளியை அடைக்க பசைகள் உபயோகப்படுத்துவது தவறு.

9. ஈறுகளின் வீக்கம் தலைவலி, கண்வலியை உண்டாக்குமா?

பற்களின் தசை நரம்புகளும், முகத்திலுள்ள மற்ற உறுப்புகளின் தசை நரம்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் கண்வலி, தலைவலி போன்றவற்றை உணர முடியும். ஆனாலும், ஈறுகளின் வீக்கம் தரும் வலிக்கும், தலை வலி மற்றும் கண் வலிக்கும் நேரடியான தொடர்புகள் இல்லை.

10. தெற்றுப்பற்களை நீக்குவது, முக அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தும் என்பது உண்மையா?

தெற்றுப்பற்கள் இருந்தால் முக அமைப்பே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். இதை கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், அது தொந்தரவாக இருக்கும்பட்சத்தில் எடுத்துவிடலாம். இதை நீக்கினால், முக அமைப்பிலிருந்து சிரிப்பு முதல், அனைத்திலும் கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். இதை தவிர்க்க முடியாது.

- டாக்டர் அரவிந்த் ராமநாதன்,

பல்மருத்துவர் மரபியல் ஆராய்ச்சி நிபுணர்







      Dinamalar
      Follow us