தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : பிப் 04, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

1புற்றுநோய் உருவாவது எப்படி?

உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் விபரீத மாற்றமே புற்றுநோய். நம் உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளிலும், வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மறைவதும், அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும், இயல்பாக தொடர்ந்து நடக்கும் செயல். இந்நிலையில், சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றம், புற்று நோய்க்கு காரணமான செல்களாக உருமாறி விடுகிறது.

2மரபணு காரணமாக ஏற்படும் புற்றுநோய்கள் எவை?

மூளை புற்று, சிறுகுடல் புற்று, கணைய புற்று மற்றும் எலும்பு புற்று நோய்கள், மரபணு மாற்றங்களால் ஏற்படுகின்றன.

3நமது வாழ்க்கை முறை புற்றுநோய்க்கு காரணமாகுமா?

கண்டிப்பாக! சூரிய ஒளி அதீதமாக தீண்டும் போது, ஒருவகை தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. புகைப்பழக்கம், நுரையீரல் புற்றுநோயை தூண்டும். மோசமான உணவுப்பழக்கம், ஆசனவாயின் மேற்பகுதியில், குதப் புற்றுநோயை உருவாக்கும்!

4புற்றுநோயின் வகைகள் என்னென்ன?

வாய்ப்புற்று, நுரையீரல் புற்று, கர்ப்பப்பை புற்று, கர்ப்பப்பை வாய் புற்று, தொண்டைப் புற்று, ரத்தப் புற்று, எலும்புப் புற்று, மார்பகப் புற்று, குதப் புற்று, கணைய புற்று, தோல் புற்று உள்ளிட்டவையுடன், புற்றுநோயின் பட்டியல் வெகு நீளம்!

5புற்றுநோய் தீண்டியதற்கான அறிகுறிகள்?

உடலின் எந்த பகுதியையும் இந்நோய் தாக்கும். எந்த இடத்தை தாக்குகிறதோ, அதைப் பொறுத்துதான், அறிகுறிகள்! குணமாகாத புண், ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு, சளியில் ரத்தம் வெளிப்படுதல், கட்டி பெரிதாகிக் கொண்டே இருத்தல், மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல், கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம், திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல் உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகள்!

6புற்றுநோய்க்கென்று ஏதேனும் தடுப்பூசிகள் உள்ளனவா?

'ஹியூமன் பாப்பிலமோ வைரஸ்' மூலம் கர்ப்பப்பை புற்றுநோய், மற்றும் ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு மட்டும் மருந்துகள் உள்ளன.



7புற்றுநோயை குணப்படுத்த, அறுவை சிகிச்சைதான் தீர்வா?


கிட்டத்தட்ட அப்படித்தான்! 30, 40 வருடங்களுக்கு முன், புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை என்பது சிரமமான ஒன்று; தற்போது, நவீன அறுவை சிகிச்சை முறைகளும், கருவிகளும் வந்துவிட்டன. மருத்துவ நிபுணர்களும், உருவாகிக் கொண்டிருக்கின்றனர். இதனால், எளிதாக அறுவை சிகிச்சை முடித்து, நோயாளியை குணப்படுத்த முடியும்.

8புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன?

நோயின் தாக்கத்தைப் பொறுத்து அல்லது நோய் தாக்கிய உறுப்புகளைப் பொறுத்து... அறுவை சிகிச்சை, மருந்துகளை உட்கொள்ளும் கீமோதெரபி, ரேடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு முறை என, மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன.

9புற்றுநோய் தாக்கி இருப்பதை, உறுதிப்படுத்தும் பரிசோதனைகள் என்னென்ன?

புற்றுநோய் இருப்பதை மேமோகிராபி, பயாப்சி மூலம் தெரிந்து கொள்ளலாம். ரத்தப் புற்றுநோய் இருப்பதை, ரத்த பரிசோதனைகள் உறுதி செய்யும். ரத்தப் புற்றுநோய் தவிர, இதர புற்றுநோய்களை, ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால், குணப்படுத்துவது எளிது என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

10குழந்தைகளை புற்றுநோய் தாக்குமா?

ரத்தப்புற்று மற்றும் மூளைப் புற்று குழந்தைகளையும் தாக்கும். மேற்கத்திய நாடுகளில், சில வகையான புற்றுநோய்கள், குழந்தைகளை 14 சதவீதம் பாதிக்கிறது. ஆனால், நம் நாட்டில் 2 முதல் 3 சதவீதம் மட்டுமே தாக்குகிறது.

துரை. ஜெயக்குமார்,

புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us