sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பத்துகேள்விகள் பளிச் பதில்கள்

/

பத்துகேள்விகள் பளிச் பதில்கள்

பத்துகேள்விகள் பளிச் பதில்கள்

பத்துகேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஏப் 22, 2015

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1 புற்றுநோய் உருவாவது எவ்வாறு?

உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும், வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மறைவதும், அவற்றின் இடத்தை நிரப்ப புதிய செல்கள் உருவாவதும் இயல்பு. ஆனால், சில செல்களில் மட்டும் ஏற்படும், விபரீதமான மரபணு மாற்றம், புற்றுநோய்க்கு காரணமாக மாறிவிடுகிறது.



2 புற்றுநோயின் வகைகள் என்னென்ன?


வாய்ப்புற்று, நுரையீரல் புற்று, கர்ப்பப்பை புற்று, தொண்டைப் புற்று, ரத்தப் புற்று, எலும்புப் புற்று, மார்பகப் புற்று, கணையப் புற்று, தோல் புற்று என, தலைமுடி மற்றும் நகம் தவிர, உடலின் எந்த பகுதியிலும் புற்று நோய் வரலாம்.

3 புற்றுநோயை குணப்படுத்த அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வா?

கடந்த, 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன், புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது சிரமமான ஒன்றாக இருந்தது. தற்போது ரேடியோ தெரபி, சிஸ்டமிக் தெரபி மட்டுமில்லாமல், உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் தாக்கியிருக்கிறதோ, அந்த பகுதிக்கு மட்டும் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, கீமோதெரபியும் சேர்த்து, பன்முக சிகிச்சை முறைகள் மூலம் அளிக்கப்படுகின்றன.

4 புற்றுநோயாளிகளின் சிகிச்சை முறைகள், இந்தியாவில் முறையாக பதிவு செய்யப்படுகின்றனவா?

இந்தியாவில் புற்றுநோயாளிகளின் சிகிச்சை முறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, புற்றுநோயாளிகளின் விவரங்கள் கூட, நம்மிடம் முழுமையாக இல்லை.

5 புற்றுநோயாளிகளின் விவரங்களை இந்திய அளவில் பதிவு செய்வது சாத்தியமா?

நிச்சயமாக முடியும். அதற்கென்று ஒரு மென்பொருள் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். தற்போது அது புழக்கத்திலும் உள்ளது. ஆன் கோ கலெக்ட் (Oணஞிணிஇணிடூடூஞுஞிt) என்பது அந்த மென்பொருளின் பெயர். நோயாளி விவரங்கள், மருத்துவ குறிப்புகள், அதற்கான செலவுகளை, தட்டச்சு செய்து, மருத்துவர்கள் பயன்படுத்த முடியும்.

6ஆன்கோ கலெக்ட் என்றால் என்ன? அதை பொதுமக்கள் பயன்படுத்த முடியுமா?

ஆன்கோ கலெக்ட் என்பது, இந்திய அளவில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய, ஒரு மென்பொருள். அதில் நோயாளியின் மருத்துவ குறிப்புகள், சிகிச்சை முறைகள், பக்க விளைவுகள் மற்றும் செலவுகள் இருக்குமே தவிர, நோயாளியின் பெயர் கூட இருக்காது. ரகசிய குறியீட்டு எண்ணின் மூலம் மட்டுமே, நோயாளிகள் அடையாளப்படுத்தப்படுவர். சிகிச்சையின் மூலம் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அவற்றை தவிர்க்க, துணை மருந்துகளை கொடுக்க, இந்த பதிவு செய்யப்பட்ட விவரங்கள் பயன்படும்.

7ஆன்கோ கலெக்ட் மென்பொருள், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு முக்கியமானது?

மேலை நாடுகளின் ஆராய்ச்சி முடிவுகளை வைத்து தான், இந்தியாவிலுள்ள புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், அதுபோன்ற சிகிச்சை முறை நமக்கு பயன்படாது. காரணம், சிகிச்சை முறைகளின் பக்கவிளைவுகளாலும், நச்சுகளாலும் கூட நோயாளிகள் இறந்து போக வாய்ப்புண்டு. எனவே, இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சைகள் ஆன்கோ கலெக்ட் மூலம் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.



8 தற்போது எப்படி, மருத்துவமனைகளில் தகவல்களை பதிவு செய்கின்றனர்?


இரு வகைகளில் பதிவு செய்கின்றனர். ஒரு பகுதியில், எத்தனை புற்றுநோயாளிகள் உள்ளனர் என்பதை, பதிவு செய்கின்றனர். தனியார் மருத்துவமனையினர், தம்மிடம் வரும் நோயாளிகளின் விவரங்களை மட்டுமே பதிவு செய்கின்றனர். எல்லா மருத்துவர்களுக்கும் பயன்படும்படியான பதிவேடு, இதுவரை இல்லை. தற்போது ஆன்கோ கலெக்ட் உள்ளது.

9 ஆன்கோ கலெக்ட்டின் பயன் என்ன?

தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும், புற்றுநோயாளியின் விவரங்களை, மருத்துவர், ஆன்கோ கலெக்ட் மென்பொருளில் பதிவு செய்வார். அந்த நோயாளி ஏதோ ஒரு காரணத்திற்காக, உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்றால் கூட, அங்குள்ள மருத்துவர், ஆன்கோ கலெக்ட் மென்பொருளை பயன்படுத்துபவராக இருந்தால், நோயாளி அந்த மாநிலத்திலும், அதே சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும்.

10 ஆன்கோ கலெக்ட் மூலம் வேறு என்னென்ன பயன்கள்?

பொருளாதார சூழ்நிலையில் பின்னடைவில் இருக்கும் நோயாளிகள், சிகிச்சைக்கு வந்தால், எளிமையான சிகிச்சைகளுக்கான செலவுகள், 'டெஸ்க் டாப் மற்றும் லேன்' முறைகளில் இருப்பதால், அவர்களுக்கான செலவுகளை கணக்கிட்டு, அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும். ஒரு முகப்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு இது பயன்படும். ஆன்கோ கலெக்ட் மென்பொருள், ரமேஷ் நிம்மகட்டா புற்றுநோய் அறக்கட்டளையில், இலவசமாக கிடைக்கிறது.

- ரமேஷ் நிம்மகட்டா

புற்றுநோய் சிறப்பு நிபுணர் இயக்குனர்,

அப்போலோ மருத்துவமனை

புற்றுநோயியல் துறை, சென்னை.

www.rncf.in






      Dinamalar
      Follow us