தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன. அதில் ரத்த அழுத்தம் முக்கியமானது. ரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பச்சை நிறமே பச்சை நிறமே: பச்சை இலைகளைக் கொண்ட கீரைகள், முள்ளங்கி இலைகள், பாகற்காய், போன்றவை குறைந்த கொழுப்புச்சத்து, கலோரிகளை தரக்கூடியவை. நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பச்சை கீரைகளில் போலிக் ஆசிட், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளன. பச்சைநிற காய்கறிகள், கீரைகளில் நிறைந்துள்ள தாது உப்புக்கள் இதய நோய் ஏற்படுவதை, 11 சதவிகிதம் குறைக்கின்றன.

தானியங்கள்: இதயநோயை கட்டுப்படுத்துவதில் தானியங்கள் 2வது இடம் வகிக்கின்றன. அரிசி, கம்பு, கோதுமை, ராகி, சோளம், பார்லி போன்ற தானியங்களிலும் பருப்புவகைகளிலும் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின்களும் காணப்படுகின்றன. குறிப்பாக வைட்டமின் 'இ,' இதயத்தைப் பலப்படுத்தவும் வைட்டமின் 'பி' காம்ப்ளக்ஸ், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன.

ஓட்ஸ்: உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் ஓட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் ரத்தநாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

பாதாம் பருப்பு: பாதாம் பருப்பை 'இருதயத்தின் நண்பன்' என்று அழைக்கின்றனர். அந்தளவுக்கு, இதில் ஒமேகா 3:6 எனப்படும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனால் கெட்ட கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

சோயபீன்ஸ்: இதயநோய் வராமல் தடுப்பதில் சோயாபீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. பீன்ஸ் உணவுகளில் உள்ள சோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாதுக்கள் நீரிழிவு நோயையும், மாரடைப்பின் தீவிரத்தையும் குறைக்கும் தன்மை உடையவை.

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு: ஆப்பிள் ரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறந்து விளங்குகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் 'சி', போலிக் அமிலச் சத்து அடங்கியுள் ளன. எலும்புகள் வலுவடையவும் புதிய சிவப்பணுக்கள் உண்டாகவும் ஆரஞ்சுப் பழச்சாறு உதவுகிறது.

தக்காளி: ஏழைகளின் ஆப்பிள் என வர்ணிக்கப்படும் தக்காளியில் வைட்டமின் 'ஏ,' 'சி' சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் சுத்தமான நீரும் பயோட்டின் என்ற சத்தும் உள்ளது. தக்காளியிலுள்ள பொட்டாசியம் உப்பு அதிக சோம்பல், படபடப்பு, ரத்தக் கொதிப்பு, இதயநோய் வராமல் தடுக்கிறது. அதோடு, புற்றுநோய் நிவாரணியாகவும் பயன்படுகிறது.

ஆலிவ் எண்ணெய் மற்றும் மாதுளை: ஆலீவ் எண்ணெய் இதயநோய் வரும் வாய்ப்பை, 53 சதவிகிதம் குறைக்கிறது. மாதுளம் பழத்தில் உள்ள பாலி பெனோல்ஸ் என்ற இதயத்திற்கு நன்மை தரும் ஆன்டி ஆக்ஸிடென்டல் அதிகம் காணப்படுகிறது. எனவே உணவே மருந்து என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நம் உடல் நலனுக்கு நன்மை தரும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டாலே நம்மை எந்த நோயும் அண்டாது என்பது உறுதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us