sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மருத்துவ அறிவியல் தந்த வரப்பிரசாதம்

/

மருத்துவ அறிவியல் தந்த வரப்பிரசாதம்

மருத்துவ அறிவியல் தந்த வரப்பிரசாதம்

மருத்துவ அறிவியல் தந்த வரப்பிரசாதம்


PUBLISHED ON : ஜன 12, 2025

Google News

PUBLISHED ON : ஜன 12, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல் முயற்சியில் 'ஐவிஎப்' எனப்படும் செயற்கை கருத்தரிப்பு முறை வெற்றி பெறாது என்ற எண்ணம் உள்ளது. ஓரளவிற்கு இது உண்மை தான் என்றாலும், ஒன்றிரண்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் அளவிற்கு சமீப ஆண்டுகளில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் கோளாறுகள், கருக்குழாய் அடைப்பு, 'எண்டோமெட்ரியோசிஸ்' எனப்படும் கர்ப்பப்பையின் வெளிப்புற சுவரில் ஏற்படும் அழற்சி, தழும்புகள், ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் இயல்பாக கருத்தரிக்க முடியாமல் போகிறது.

இதுதவிர காரணம் இல்லாமலேயே கருத்தரிக்க முடியாமல் போவதும் உண்டு.

எதுவாக இருந்தாலும், இயல்பாக கருத்தரிக்க முடியாதவர்களுக்கு, ஐவிஎப் முறை மருத்துவ அறிவியலில் ஏற்பட்ட வரப்பிரசாதம். திருமணம் ஆன ஓராண்டில் கரு உருவாகவில்லை என்றால், முதலில் முழுமையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். அதன்பின், ஹார்மோன் செயல்பாடு, விந்தணு, எண்ணிக்கை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை, போன்றவற்றை முறையாக செய்தால், காரணத்தை தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சை செய்யலாம்.

மருந்துகளால் கரு முட்டைகளின் வளர்ச்சியைத் தூண்டலாம். முதிர்ச்சியடைந்த கரு முட்டைகளை நுண்துளை அறுவை சிகிச்சை வாயிலாக தனியே பிரித்து,விந்தணுவுடன் இணைத்து, சோதனைக் கூடத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட கருவை உருவாக்கலாம்.

இதிலிருந்து ஆரோக்கியமான கருவை தேர்வு செய்து, பெண்ணின் கருப்பையில் வைக்கலாம்.

கருவை வைத்த இரண்டு வாரங்கள் கழித்து கர்ப்பத்தை உறுதி செய்ய முடியும்.

இளம் வயதினர் மட்டும் தான் இந்த முறையில் குழந்தை பெறலாம் என்பதில்லை. தானமாக பெற்ற கரு முட்டை உதவியுடன்நடுத்தர வயதினரும் குழந்தை பெறலாம்.

முப்பது வயதிற்குள் திருமணம் செய்தால், இயல்பாக கரு தங்குகிறதா என்று ஒரு வருடம் பார்க்கலாம்.

இதுவே 35 வயதிற்கு மேல் என்றால், ஆறு மாதத்தில் இயல்பாக கருத்தரிக்காவிட்டால், ஸ்கேன் உட்பட அடிப்படை பரிசோதனைகளை தம்பதி செய்ய வேண்டும். பிரச்னை எதுவும் இல்லாவிட்டால் அடுத்த ஆறு மாதங்கள் காத்திருந்து பார்க்கலாம்.

விந்தணுக்களின் எண்ணிக்கை 3 - 6 கோடி இருக்க வேண்டும்.

20 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஐசிஎஸ்ஐ முறையிலும், 10 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், ஐவிஎப் முறையிலும் தான் குழந்தை பெற முடியும்.

சில பெண்கள், 20-25 வயதில் எண்டோமெட்ரியோசிஸ். பிசிஒடி- நீர்க்கட்டி, உடல் பருமனுக்கு சிகிச்சை செய்து குணம் பெற்றிருக்கலாம்.

இவர்கள் திருமணம் ஆனவுடன் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.



டாக்டர் வனிதா ஸ்ரீ. ஆர்,

மகப்பேறு மருத்துவ ஆலோசகர்,

வரம் ஐவிஎப், எம்ஜிஎம் ஹெல்த் கேர்,சென்னை044 4524 2424info@mgmhealthcare.in






      Dinamalar
      Follow us