தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நோய்களுக்கு தீர்வு யோகாவில் இருக்கு!

நோய்களுக்கு தீர்வு யோகாவில் இருக்கு!

நோய்களுக்கு தீர்வு யோகாவில் இருக்கு!


PUBLISHED ON : ஜூன் 28, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. எப்படியெனில் உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும். யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும். எனவே மருந்து மாத்திரைகளை சாப்பிட விரும்பாதவர்கள், யோகாவை தினமும் செய்து வந்தால், பல நோய்களைக் குணப்படுத்தலாம். உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன.

எவ்வாறு உடலில் நோய் ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் காரணமோ, அதே போல் நோயை சரிசெய்ய ஒருசில உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப்பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.

குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. ஆனால் யோகாவில் ஒன்றான இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்னையை முற்றிலும் குணப்படுத்த முடியும். அதுவும் அதனை நாள்தோறும் பிராணயாமம் செய்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

அஜீரணக் கோளாறு ஒரு பெரிய நோய் இல்லாவிட்டாலும், தற்போது வேலை செய்வோருக்கு, இந்த பிரச்னை அதிகம் உள்ளது. இத்தகைய பிரச்னையை போக்குவதற்கு மருந்துகள் இருப்பினும், இங்கு காண்பிக்கப்பட்டுள்ள பாலாசனத்தை செய்து வருவதன் மூலம் நீக்க முடியும். போதிய ரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் ரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. எனவே உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோர் பலர், அனுபவிக்கும் பிரச்னைகளுள் ஒன்று தான் முதுகு வலி. இத்தகைய முதுகு வலியைப் போக்க, சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்து வந்தால், முதுகு வலியை சரிசெய்யலாம். பலர் மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப்படுகின்றனர். இதனால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்னை தான், கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், யோகாசனத்தை செய்ய வேண்டும். அதற்கு சிறந்த நிலை, இங்கு குறிப்பிட்டுள்ள சேதுபந்தாசனம் தான். மன அழுத்தத்தைப் போக்க சிறந்த வழி யோகா தான். மாத்திரைகளை போட்டு மனதை அமைதிப்படுத்த விரும்பாதவர்கள், உட்டானாசன நிலையை செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us