sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தினம் ஒரு செவ்வாழை

தினம் ஒரு செவ்வாழை

தினம் ஒரு செவ்வாழை


PUBLISHED ON : ஆக 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அடிக்கடி உட்கொள்ளும் ஒரு பழம், வாழைப்பழம். இரவு உணவு உண்ட பின்னால், வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது பலர், கடைபிடித்து வரும் ஒன்று. ஆனால், சாப்பிடுவதற்கு, அரைமணி நேரத்துக்கு பின்னால், பழம் சாப்பிடுவது தான், உண்மையான பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதில், செவ்வாழைப்பழம் பலரும் விரும்பும் ஒன்று. விலை, கொஞ்சம் அதிகம் என்றாலும், இருக்கக் கூடிய சத்துகள் ஏராளம். வாழைப்பழங்களிலேயே, செவ்வாழையில், அதிகமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன. பீட்டா கரோட்டீன், தமனிகள் தடிமனாவதை தடுக்கும் மற்றும் உடலை இருதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.

இது, உடலுக்குள் செல்லும் போது, வைட்டமின் ஏவாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில், பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். உடலில், கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது நல்லது.

செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களை விட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும். இப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.

பல்வலி, பல் அசைவு போன்ற உபாதைகளையும், செவ்வாழைப்பழம் விரைவில் குணப்படுத்தும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால், தொடர்ந்து,

21 நாட்கள் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம். சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழை பழத்தை தொடர்ந்து, ஏழு நாட்கள் உட்கொண்டு வர, சரும நோய், விரைவில் குணமாகும். எப்போதும்

சோம்பலாய் இருப்பவர்களுக்கு, இப்பழம், சிறந்த அருமருந்து. சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினம் ஒரு செவ்வாழையை எடுத்துக் கொள்வது நல்லது. அந்த நாளில், உற்சாகம் இருப்பதை, நீங்களே அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு, நெஞ்செரிச்சல், தீராத உபாதையை கொடுத்து விடும்.

இதை போக்க, செவ்வாழை நல்லது. இதில், இயற்கையாக அன்டாசிட் தன்மை கொண்டதால், இப்பிரச்னை நீங்கும். பழம் எனக்கு பிடிக்காது என்று இருந்தாலும் கூட, செவ்வாழையை உட்கொண்டு வந்தால், இருக்கும் உடல் உபாதைகள் கட்டுக்குள் வரும் என்பதில் ஐயமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us