PUBLISHED ON : ஜூன் 12, 2016
அடிக்கடி சோர்வடையும் உடல், வெயில் ஒத்துக்கொள்ளால் மயக்கம் என, பலர் பாதிக்கப்பட்டிருப்பர். இதை கண்டுகொள்ளாமல் விட்டால், ஆரோக்கியத்தை இழக்க நேரிடலாம். தவிர, உடம்பில் ரத்தம் இல்லாமல் போனாலும் இவ்வகையான பிரச்னை ஏற்படுவதற்கான
வாய்ப்புகள் உண்டு.
காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு என, நான்கு நேரம், குறிப்பிட்ட இடைவெளியில், வயிற்றுக்கு
தேவையானவற்றை உட்கொள்ள வேண்டும்.
சத்தான உணவை சாப்பிடாமல் இருப்பவர்கள் தான், இன்று ஏராளம். குறிப்பாக, பெண்கள், உடம்பை, ஸ்லிம் ஆக மாற்ற வேண்டும் என்பதற்காக, சத்தான உணவை தவிர்த்து வருகின்றனர்.
ஆகையால், 4045 சதவீதம் பேர், ஹீமோகுளோபின் அளவு குறைந்தே உள்ளனர். இதிலிருந்து விடுபட, பீட்ரூட் வாட்டரை பருகலாம். தினமும் அதிகாலையில் இந்நீரை குடித்து வரும் போது, பெரும் பலன் கிடைக்கும். இதற்காக, முந்தைய நாள் இரவில், ஒரு
பீட்ரூட்டை பாதியாக அறுத்து, ஒரு பாதியை, அதற்கு ஏற்றவாறு நீரில் ஊறவைக்க வேண்டும். இந்நீரை காலை எழுந்தவுடன் நன்கு
வடிகட்டி குடித்து வர ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
இதேபோல், நாவல்பழம், மாதுளை உள்ளிட்டவற்றை உரித்து பழமாக சாப்பிட்டு வர இரும்பு சத்துக்கூடும். தவிர, பீட்ரூட் தண்ணீரை குடிக்கும் போது, முகம் மலர்ச்சியடையும். கரும்புள்ளிகள் நீங்கி பொலிவாக இருக்கும்.