தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வெயில் மட்டுமே காரணம் இல்லை!

வெயில் மட்டுமே காரணம் இல்லை!

வெயில் மட்டுமே காரணம் இல்லை!


PUBLISHED ON : ஏப் 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புற நோயாளிகளில் 10ல் ஒன்பது பேருக்கு படபடப்பு, மன அழுத்தம், துாக்கமின்மை, முழு உடல் பரிசோதனை செய்யும் 10 நபர்களில், ஒன்பது பேருக்கு 'விட்டமின் - டி' குறைபாடு உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இப்படி தவறுதலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான முடிவுகள் வருகிறதா என்று ஆராய்ந்ததில் அப்படியுமில்லை. காரணம், குறைபாட்டின் அளவுக்கு ஏற்ப அறிகுறிகளும், பாதிப்பும் இருக்கவே செய்கிறது.

விட்டமின் - டி குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் வெயில் படாமல், 'ஏசி' அறையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களும் கிடையாது. குறைபாடு உள்ள ஒன்பது பேரில், சிலர் விற்பனை பிரதிநிதிகள், இன்னும் சிலர் விவசாயிகள் என்பது தான், இதில் வியப்பான விஷயம். இவற்றையெல்லாம் கவனிக்கும் போது, போதுமான நேரம் வெயிலில் இருந்தாலும், வளி மண்டலத்தில் உள்ள கார்பன் மாசுகளால், 'ஓசோன்' படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, சரியான அளவு புற ஊதாக் கதிர்கள் நம்மை வந்து அடைகிறதா... குறிப்பாக, அடர்ந்த நிற தோல் உள்ளவர்களுக்கு, வேறு ஏதாவது காரணிகள் இருக்க வாய்ப்புள்ளதா...

தொடர்ச்சியாக பல மணி நேரம், 'ஏசி'யில் இருப்பது, எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறதா என்று, பல கோணங்களில் புதிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. குறைபாடு இருந்தால் அலட்சியப்படுத்தாமல், தேவையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

- டாக்டர் பாபு நாராயண்,

பொது மருத்துவர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us