sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பணிகளில் முன்னேற இருக்குது வழி!

/

பணிகளில் முன்னேற இருக்குது வழி!

பணிகளில் முன்னேற இருக்குது வழி!

பணிகளில் முன்னேற இருக்குது வழி!


PUBLISHED ON : ஜூலை 30, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 30, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லூரி வாழ்க்கை முடிந்து, பிடித்த வேலையிலோ, கிடைத்த வேலையிலோ சேரும் போது, மனம் பதட்டப்படும். தன்னுடைய துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், சில காரணிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவது, முதல்படி. வேலையில், தவறு என்பது இயல்பு; ஆனால், தொடர்ந்து விடக்கூடாது.

பணிகளை மேற்கொள்ளும் போது, திட்டமிடுவது அவசியம். முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில், முதலில் கவனம் செலுத்த வேண்டும். தங்களுக்கு கொடுக்கப்படுகிற வேலையை, எப்படி முடிக்க வேண்டும் என்பதை, நன்றாக கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். எதுவாக இருந்தாலும், ஈடுபாடு என்பது முக்கியம். கிடைத்த வேலை பிடிக்காமல் போனால் கூட, அதிலும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வேலையை,

குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதை, துவக்கத்திலேயே முடிவு செய்ய வேண்டும்.

வேலையை முடித்து விட்டால், நேரம் கிடைக்கும் போது, மற்றவர்களின் வேலைகளையும் கேட்டு தெரிந்துக் கொள்வது நல்லது. ஒரு வேலையை முடித்து ஒப்படைக்கும் போது, நாம் சொல்லாமலே, இந்த வேலையை இவர்தான் செய்திருப்பார் என்று, அவர்களே தெரிந்து கொள்ளும்படியாக, வேலையில் நேர்த்தி இருக்க வேண்டும். வேலை இருக்கும் சமயங்களில், உன்னிப்பாக கவனிப்பதை விட்டு விட்டு, அரட்டையடித்துக் கொண்டிருந்தால், சுணக்கம் ஏற்படலாம். இது, முன்னேற்றத்தை பாதிக்கும்.

பெண்கள் பணியில் சிறக்க வீடு, அலுவலக சூழலை புரிந்து, வீட்டில் இருக்கும் வேலைகளை பட்டியலிட்டு, நேரத்தை கணக்கிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில், பணிகளை முடிக்க முயற்சி எடுக்க வேண்டும். பணி முன்னேற்றத்துக்கு, இயன்ற அளவு உழைப்பை கொடுக்க வேண்டும்;

உதவும் படிப்புகளையும் படிக்க நேரம் ஒதுக்கலாம்.

வீடு மற்றும் அலுவலகம் என, இரு இடங்களிலும் உழைக்கும் பெண்கள், தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில் அலட்சியம் காட்டக் கூடாது. எந்த சிரமம் வந்தாலும், கலங்காத மனத்திடத்தை உருவாக்குவது அவசியம். புதிது, புதிதாக கற்றுக் கொள்ளும் பட்சத்தில் தான், பதவி உயர்வுக்கு, நீங்கள் தகுதியானவர் என்று அர்த்தம். இதற்கு, கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளவும் தயங்க வேண்டாம்.

அதே நேரம், வேலை தான் வாழ்க்கை என்று நினைத்து விடக்கூடாது. அப்படி நினைத்தால், நம் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழக்க நேரிடும். எந்த வேலையாக இருந்தாலும், ரசனையோடு மேற்கொள்ளுங்கள். அலுவலகத்தில், நல்ல நட்பு வட்டாரத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு உதவி கேட்கும் போது, கிடைக்கும் அளவுக்கு, இந்த நட்பு வட்டாரம் இருக்க வேண்டும். இது நட்பு வட்டத்தைக் கூட்டுவதோடு, நம் குடும்பத்தை நிர்வகிக்கவும், அலுவலகத்தில் புதிய யோசனைகள் வழங்கவும் உதவியாக இருக்கும்.

நீங்களும், உங்களுடைய விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். வீட்டுக்கு என்று ஒரு நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அலுவலகத்தில், வேலைப்பளுவில் இருக்கும் போது, இவர்களின் உதவி, நிச்சயமாக கிடைக்கும். சக பணியாளர்களுடன், இன்முகத்தோடு பழகுவது நல்லது. எவ்வித காரணம் கொண்டும், அவர்களோடு சண்டை, சச்சரவில் ஈடுபடுவதை, முடிந்தவரை தவிர்த்து விட வேண்டும். அப்போது தான், உங்கள் மீது, நிர்வாகத்தினருக்கும், நல்ல நம்பிக்கை ஏற்படும்.






      Dinamalar
      Follow us