தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாத்தி யோசி

மாத்தி யோசி

மாத்தி யோசி


PUBLISHED ON : செப் 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

நமக்கெல்லாம் வராது!

'நமக்கெல்லாம் கேன்சர், வருமா நோ, நோ- எங்க பரம்பரையில யாருக்கும் கேன்சர் கிடையாது. எங்க வீட்டில, சத்து நிறைந்த, விலை உயர்ந்த உணவைச் சாப்பிடுகிறோம், விலை உயர்த்த வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ரொம்ப சுத்த, பத்தமாக இருக்கிறோம். சினைப் பை புற்று மட்டுமல்ல, எந்த புற்றுநோயும் நெருங்காது'
- இப்படி நினைப்பவரா நீங்கள்?

நீங்கள் மட்டுமல்ல; பலரும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம், மாறிவரும் உணவுப் பழக்கம், ரசாயனங்களின் உதவியோடு விளைவிக்கப்படும் பழம், காய்கறிகள், சூழல் மாறுபாடு என, பல்வேறு அம்சங்கள் புற்றுநோய் குறித்த முந்தைய கருத்துகளை பொய்யாக்கி வருகின்றன.

சுத்தமாக இருந்தால், தொற்று நோய்கள் வராது என்று சொல்லலாம்; புற்றுநோய்க்கு இது பொருந்தாது.

பல புற்றுநோய்களுக்கு, காரணம் இதுதான் என, இன்று வரை உறுதியாக சொல்ல முடியவில்லை. சினைப் பை புற்றும் அந்த வகையைச் சேர்ந்தது தான்.

அன்றாட வாழ்வில் இயற்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வதே, பல நோய்களுக்கு காரணம். எல்லாமே இயந்திரதனமாகி விட்டதால், உடல் உழைப்பு குறைந்து, உடல் இயக்கம் மாறுபடுகிறது. இது பல நோய்களுக்கு அடிகோலுகிறது.

சினைப் பை புற்றுக்கு அதிக எடை, கொழுப்பும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. பிட்சா போன்ற உணவுகள், விலை உயர்ந்ததாக இருக்கலாம்; ஆனால், ஆரோக்கியமானதா என்பது கேள்விக்குறியே.

நாக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும் பல நுண்ணிய ரசாயனப் பொருட்கள் இந்த உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்றன.

நாளடைவில் இந்த ரசாயனங்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. எல்லா ஐ.டி., வளாகங்களிலும், 'புட் கோர்ட்' என்று அழைக்கப்படும் நவீன உணவுக் கூடங்கள் அலங்கரிக்கின்றன.

இதனால், வீட்டில் சமைத்து எடுத்துச் செல்வது குறைந்து, மெல்ல, மெல்ல ஹோட்டல் மற்றும் துரித உணவு வகைகளுக்கு அடிமையாகி வருகிறோம்.

உடலை அழகுபடுத்த, மிதமிஞ்சிய வாசனைப் பொருட்களை பயன்படுத்துவதும் நல்லதல்ல. டால்கம் பவுடரில் உள்ள ரசாயனப் பொருட்கள், புற்றுநோய்க்கு ஒரு காரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் பவுடரை பிறப்புறுப்புகளில் பயன்படுத்தும்போது, அது கர்ப்பப் பை வாய் வழியாக சினைப் பையை அடைந்து, தீங்கு விளைவிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தமும் புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று. போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் வீட்டிலும், வேலைக்கு செல்லும் இடத்திலும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. எனவே, உடலை நாம் ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டும் போதாது.

மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோக, தியானப் பயிற்சிகளை செய்வது நல்லது.

சினைப் பை புற்றுநோய்க்கு வயிற்று வலி, அஜீரணம், வயிறு உப்புசம் தான் முக்கிய அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை நம்மில் பலர் உதாசீனப்படுத்தி விடுகிறோம்.

எல்லா வயிற்று வலியும், சினைப் பை புற்றுக்கான அறிகுறி அல்ல. ஆனால், வலி, அஜீரண கோளாறு தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம்.

சினைப் பையில் சாதாரண கட்டி இருந்தால் கூட வயிற்று வலி இருக்கும். எனவே பீதி தேவையில்லை. சாதாரண கட்டியா அல்லது புற்றுக் கட்டியா என்பதை ஆரம்ப நிலையிலேயே தெரிந்து கொண்டால் ஆபத்து இல்லை.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் பூரணமாக குணப்படுத்திவிட முடியும்.

வலி, வீக்கம் உட்பட உடலில் மாறுபாடுகள் தோன்றும்போது உதாசீனப்படுத்தாமல் உரிய மருத்துவரை அணுகி தெளிவு பெறுவது அவசியம்.

எனவே, இயற்கை வழியில் நடந்து, நமது பாரம்பரிய உணவு முறையை தொடர்ந்து கடைப்பிடித்து, யோக, தியானம் போன்ற பயிற்சிகளை செய்து வந்தால் வாழ்க்கை வசப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us