sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நொச்சியில் இத்தனையா....!

நொச்சியில் இத்தனையா....!

நொச்சியில் இத்தனையா....!


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூலிகை இலைகளில் ஆகச்சிறந்த மூலிகையாக நொச்சி விளங்குகிறது. மலைப் பகுதிகளில் வளர்பவை; அதிகமான உயரத்துடன் காணப்படும்.

நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.

நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது. வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை, கால்நடைகள் அண்டாது. வயல் வெளிகளிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களிலும், அதிகமாக காணலாம். இந்தச்செடி, சமவெளியில் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மலைப்பகுதிகளில், 6 மீட்டர் வரையில் வளரும். நொச்சி செடிகளை ஆரம்பத்தில் ஈரம் காயாதவாறு வளர்த்து வந்தால், எளிதில் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய செடியாகும்.

நொச்சி இலையை காய்ச்சி, ஆவி பிடித்தால் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி தீரும், சைனஸ் கோளாறுகள் சரியாகும். மிளகு, பூண்டு உடன் சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைகளைத் தேய்த்து வந்தால், அவை மறையும். காய்ந்த அல்லது பச்சை நொச்சி இலையை தீமூட்டி, புகை மூட்டம் போட்டால், கொசுக்கள் அண்டுவதில்லை. புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல், நொச்சிக்கு

இருப்பதாக கண்டறிந்து, அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருவது குறிப்பிடத் தகுந்ததாகும்.

ஒரு தேக்கரண்டி, நொச்சி இலை சாறில், ஒரு கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை, மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். மேலும் நொச்சி, உத்தாமணி இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடம் கொடுக்க வேண்டும். நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும். நொச்சி இலையை அரைத்து மண்ணீரல் வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம். நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம் குணமாகும்.

நொச்சி இலையை, அரிசிக் கஞ்சியில் அரைத்து புண்களைக் குணமாக்க உபயோகிக்கலாம். பொதுவாக, நொச்சி இலைச் சாறு கொண்டு புண்களை கழுவி மருந்திடலாம். ஒரு பிடி நொச்சி இலைகளை, 2 லிட்டர் கொதி நீரில் போட்டு ஆவி பிடிக்க மண்டை நீரேற்றம் கட்டுப்படும். நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பைமேனி, ஆடாதோடை, நாயுருவி ஆகியவற்றை, வகைக்கு ஒரு பிடி வாயகன்ற மண் பாத்திரத்தில் இட்டு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில், பொறுக்கும் சூட்டில் ஆவி பிடிக்க வாதநோய்கள், தலைவலி போன்றவை குணமாகும். கொதித்த நீரைத் துணியில் நனைத்து ஒற்றமிடலாம்.

நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்த தாய்மார்களுக்கு அசதி குறையும். நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. எனவே, நொச்சி இலை மனிதர்களின் பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாகும், எளிய மூலிகை என்றால், அதில் மிகையில்லை. வீட்டு தோட்டங்களிலும், மாடி தோட்டங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us