தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...!


PUBLISHED ON : பிப் 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் முக்கிய உணவுகள்.

வெள்ளைப் பூண்டு: குடலில் உள்ள புழுக்களிலிருந்து, தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

வெங்காயம்: வெங்காயம், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றை தடுத்து, உடலில் நோய் எதிர்ப்புச் தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி, நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி, தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு: வைட்டமின் சி ஒருமுகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை, அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி, உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது

எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரௌன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (ஆ4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால் மீன், நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில், இறால் மீன், நண்டு, இவற்றில் உள்ள, துத்தநாக உப்பு உதவுகிறது.

முட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்றும் நுண்ணுயிர்கள், முட்டைக்கோஸால், அகற்றப்படுகின்றன.

இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us