PUBLISHED ON : செப் 21, 2025

குடலையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எளிய மருந்து கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய், கருங்காலி சத்து, வேங்கைச் சத்து, அயச்செந்துரம், சங்கு பஸ்பம், சிலாசத்து பஸ்பம் ஆகிய மூலப் பொருட்கள் அடங்கிய முக்கனி கர்ப்ப மருந்து அல்லது திரிபலா கர்ப்ப மாத்திரை என்ற பெயரில் சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும், எந்த தொற்றும் ஏற்படக் கூடாது, ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நோய் வரக் கூடாது, உடல் உறுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்று நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
6 - 12 வயது வரை தினமும் காலை, இரவு உணவுக்கு பின் ஒரு மாத்திரை சாப்பிடலாம். 12 வயதிற்கு மேல் இரு வேளை இரண்டு மாத்திரை சாப்பிடலாம்.
தொடர்ந்து சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்தின் செயல்பாட்டை சீராக வைக்கும். நுரையீரல் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். ரத்த சோகை ஏற்படாது. நினைவாற்றல் பெருகும்.
எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது. விலையும் குறைவு. இத்துடன் சேர்த்து சரியான நேரத்திற்கு சமச்சீரான உணவு சாப்பிடுவதும், உடற்ப யிற்சி செய்வதும் அவசியம்.
டாக்டர் காமராஜ் சாமியப்பன், சித்த மருத்துவர், மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அதிகாரி,திருச்சி0431 2300181, 94898 20113drkaamaraaj@gmail.com

