
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளிர் காலத்தல், காலையில் எழுந்தவுடன் கை, கால்கள் மரத்துப் போவது, கால் மூட்டுக்களை மடக்க சிரமப்படுவது, கைகள் இறுக்கம், கழுத்தை திருப்புவதில் சிரமம் ஏற்படலாம். வாதம் அதிகரிப்பது தான் இதற்கு காரணம். இதற்கு, உணவில் ஓமம், கருஞ்சீரகம், சீரகம் இவற்றை வறுத்து, பொடியாக்கி, காலை, மாலை, தேவையான நேரத்தில், ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து, பாதியாகும் வரை காய்ச்சி, ஆற வைத்து, சிறிது பெருங்காயம் சேர்த்து குடித்தால், உடலுக்குத் தேவையான உஷ்ணம் கிடைக்கும். வாயுக்கள் உடம்பில் இருந்து வெளியேறத் துவங்கும்.
டாக்டர் தீபா ஜெயராம், ஆயுர்வேத மருத்துவர்,பிரணவம் ஆயுர்வேத சிகிச்சாலயா, சென்னை044 42146525 / 9841373458deepa_jram@yahoo.com