
செய்முறை:
1. பாதங்களை ஒன்று சேர்த்து நேராக நிற்க வேண்டும்
2. மூச்சை இழுத்துக் கொண்டே, இரண்டு கைகளையும், தலைக்கு மேலே உயர்த்தி, ஒன்று சேர்க்க வேண்டும்
3. பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, கைகளை முன்னே நீட்டியவாறு, முன்புறம் குனிய வேண்டும்
4. அதே சமயம், வலது காலை பின்புறம் உயர்த்த வேண்டும். பார்வை ஒரே புள்ளியில் இருக்க வேண்டும்
5. இடது கால் முட்டி மடங்கக் கூடாது. இரண்டு கைகளுக்கு இடையே முகம் இருக்க வேண்டும்.
6. ஆசனத்தின் இறுதி நிலையில் கைகள், முதுகு, வலது கால், ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்
7. ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், மூச்சை இழுத்துக் கொண்டே, கைகளை மேலே உயர்த்தி, பின் சாதாரண நிலைக்கு வர வேண்டும்
8. பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
பலன்கள்
1. மூட்டுகள் நன்கு பலம் பெறுகின்றன
2. நீண்டநேர நடைப் பயிற்சிக்குண்டான பலன் கிடைக்கிறது
3. மூட்டுவாத பிரச்னைகளில்இருந்து விடுவிக்கிறது
4. முதுகு வலிக்கு நல்ல தீர்வு ஏற்படுகிறது
5. மனதை ஒரு நிலைப்படுத்துகிறது.
- ரா.சுதாகர்,
திருமூலர் பிரபஞ்ச யோகா மையம்,
சென்னை.
97909 11053

