PUBLISHED ON : ஏப் 26, 2015
வாழைத்தண்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எவ்வகையில் நல்லது என்பது பலருக்கு தெரியாது. வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்தும் வகை உணவுப்பொருட்களும், மருத்துவக் குணம் கொண்டவை. குறிப்பாக, ஜீரண உறுப்புகளை பாதுகாக்கும் அரிய வகை சத்துக்கள், வாழையில் உள்ளன.
வாழைத்தண்டு, குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீரக கல் இருந்தால், அவற்றை கரைத்து விடும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச்சாற்றை ஒன்று இரண்டு அல்லது அவன்ஸ் வீதம் தினம் சாப்பிட்டால், தீராத இருமல் நீங்கும்.
கோழைக்கட்டையும் இளகச்செய்யும். வாழைப்பூவில், துவர்ப்பு சத்து உள்ளது. வாழைப்பூ அல்லது வாழைத் தண்டை, சமையலுக்கு பயன்படுத்தும் போது, அந்த துவர்ப்பை, தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகின்றனர். காரணம் துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்பதால். அந்தத் துவர்ப்பில் தான் பல வியாதிகளை போக்கும் பி வைட்டமின் சத்து உள்ளது. வாழைப்பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால், மூலநோயின் வலியை கட்டுப்படுத்த முடியும்.