sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/குரல் இனிமைக்கு மாதுளை

குரல் இனிமைக்கு மாதுளை

குரல் இனிமைக்கு மாதுளை


PUBLISHED ON : ஆக 20, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழங்களில் முத்தான பழம், மாதுளை. எந்த சீசனிலும் கிடைக்கும் பழம். அரிய மருத்துவ குணம் கொண்ட பழம் என, மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் பழங்களில், முக்கிய இடம் பிடிக்கிறது.

மாதுளை முத்துகளை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் குறைந்து விடும். ரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கறைபடிந்து அடைத்து கொண்டால், ரத்த ஓட்டம் தடைபடும்.

அப்போது, இருதய பாதிப்பு ஏற்படும். இது, அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். மேலும், ரத்தத்தை சுத்தப்படுத்தி, நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க, மாதுளைப்பழம் சிறந்த உணவாகும். தாதுபுஷ்டிக்கு இது நல்ல மருந்தாகும். உடலை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. மாதுளை நெஞ்சு வலிக்கு நல்லது. மேலும், தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால், முடி ஏராளமாக உதிரும். இதை சரி செய்யும் தன்மை, மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து மூன்று டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.

மூன்று டீஸ்பூன் வெந்தயம், இரண்டு டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து, 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று, நன்றாக வளர ஆரம்பிக்கும்.

துர்நாற்றம் நீங்கும்: மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன்

உடலும் குளிர்ச்சியாகி விடும். ஒரு டீஸ்பூன் மாதுளை சாறு, அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும், தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டை தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும். பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை சாறுடன், ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின் கழுவி வந்தால், பருக்கள் நெருங்காது.

ஆரோக்கியத்துக்கு வழி: மாதுளை சாறை, தொடர்ந்து, 40 நாட்கள் அருந்தி வந்தால், பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளை தான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு, இதில் ஏதாவது ஒன்றை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us