sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

என்றென்றும் 16 ஆக இருக்க விருப்பமா...?

/

என்றென்றும் 16 ஆக இருக்க விருப்பமா...?

என்றென்றும் 16 ஆக இருக்க விருப்பமா...?

என்றென்றும் 16 ஆக இருக்க விருப்பமா...?


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'என்றும் 16' ஆக இருக்க வேண்டும் என்பது, 60 வயது எட்டியவருக்கும் ஆசைதான்.

முகத்தில், லேசாக சுருக்கம் வந்தாலே, மனதும் சுருங்கி விடுகிறது பலருக்கு. உடலையும், மனதையும் இளமையாக வைத்து கொள்ள, உணவியல் நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்:

உண்ணும் உணவே, நமக்குள் அதிசயத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம், தோற்றத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர், உணவியல் வல்லுனர்கள். தினசரி, ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு உட்கொள்ள வேண்டும்; புருக்கோலி, கேரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீன் உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தாவர எண்ணெய்களில் சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதுமையை தவிர்ப்பதில், நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்குண்டு. நார் சத்துள்ள பழங்கள், காய்கறிகள், பருப்பு போன்றவற்றை உண்பதன் மூலம் ஆன்டி ஆக்ஸிடென்ட், இளமையை தக்க வைக்கும். மாதுளை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை அதிகம் உண்ண வேண்டும். கிரீன் டீயில் அதிக ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் உள்ளன; இது முதுமை வராமல் தடுக்கின்றது.

புகைப்பிடிப்பது, ஆல்கஹால், போதை வஸ்துகளை உபயோகிப்பது, முகத்தில் சுருக்கத்தை வரவழைக்கும். முக்கியமாக, உடற்பயிற்சியே இளமையை தக்க வைக்கும் இனிய வழி. தினசரி, 30 நிமிடம், உடற்பயிற்சி செய்வதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இறுக்கும். முகச்சுருக்கத் தை போக்க, தோலை பாதுகாக்க, ஈரப்பதத் தை தக்க வைத்துக் கொள்ளும் சோப் உபயோகிக்க வேண்டும்.

இளமையை தக்க வைப்பதில், மூளைக்கு முக்கிய பங்குண்டு. எனவே மூளையை சுறுசுறுப்பாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும்.






      Dinamalar
      Follow us