PUBLISHED ON : மார் 11, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல் நாள் இரவு நீரில் ஊற வைத்த, சில பாதாம் பருப்புகளை மெல்லுவதில் துவங்குகிறது, தமன்னாவின் நாள். தமன்னா, தயிர் பிரியை. எந்த வேளை, என்ன சாப்பிட்டாலும், அத்துடன் தயிர் சேர்த்தே சாப்பிடுகிறார்.
காரணம், இடைவிடாத படப்பிடிப்பு, மேக்கப், லைட்டிங்... இவற்றால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை, தயிர் சமன் செய்வதாக நம்புகிறார்.
சாக்லேட், ஐஸ்கிரீம், வறுத்த, பொரித்த உணவுகள் ரொம்ப பிடிக்கும் என்றாலும், ஒல்லியாக இருப்பதில், அதிக விருப்பம் உள்ளதால், அளவோடு, அவற்றை சாப்பிடுவார்.
நாள் தவறாமல், தினமும் ஒரு மணி நேரம், ஜிம்மில் செய்யும் கடுமையான, வொர்க் - அவுட், பிடித்த உணவுகளின் அளவு சற்று அதிகமானாலும், எடை கூடாமல் பார்த்துக் கொள்வதாக கூறுகிறார். தமன்னாவின் இன்னொரு பேவரேட், பட்டர் காபி.
- தமன்னா பாட்டியா, நடிகை

