தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/"நுரையீரல் நோய்களுக்கு அறிகுறி என்ன'

"நுரையீரல் நோய்களுக்கு அறிகுறி என்ன'

"நுரையீரல் நோய்களுக்கு அறிகுறி என்ன'


PUBLISHED ON : செப் 22, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

நான் 6 ஆண்டுகளாக 'ருமாட்டிக் ஆர்த்ரைட்டிஸ்' (மூட்டுவலி) பாதிப்புக்கு, மருந்துகள் எடுத்து வருகிறேன். இரு மாதங்களாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது. நுரையீரலில் பிரச்னை வருமா?

'ருமாட்டிக் ஆர்த்ரைட்டிஸ்' என்பது இணைப்பு திசு சம்பந்தமான ஒரு நோய். அறுபது சதவீதம் வரை இந்நோயால் நுரையீரல் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் நுரையீரலில் நீர்சேர்வது, தழும்புகள் ஏற்படலாம், கட்டிகள் வரலாம். நுரையீரல் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதால், நீங்கள் உடனே ஒரு நுரையீரல் சம்பந்தமான நிபுணரை ஆலோசனை செய்வது நல்லது.

அப்படி நுரையீரலில் பிரச்னை இருந்தால், நுரையீரல் சம்பந்தமான எக்ஸ்ரே, பி.எப்.டி., உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து, சரியான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இப்பிரச்னையில் இருந்து முழுவதுமாக குணமடையலாம்.

நான் 2004 முதல் நுரையீரல் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். என் நுரையீரலின் இடது பக்கத்தில் தழும்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்கேனில் தெரிகிறது என்றும், மேலும் அத்தழும்பு பரவாமல் இருக்க வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர் கூறுகிறார். இது எதனால் ஏற்படுகிறது; இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

நீங்கள் கூறுவதை பார்க்கும்போது, அது 'I.L.D' ஆக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது இவை காற்றுபோய் சேரும் இடத்தில் ஏற்படுகிற தழும்பு. இதற்கு என்.ஏ.சி., LOW DOSE STEROIDS, IMMUNO MODULATOR போன்ற மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்படும்.

இந்நோய்க்கான மருத்துவ காலம் என்பது நோயின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். ஒரு சிலருக்கு இம்மருந்து வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். சிலருக்கு இம்மருந்துகளை படிப்படியாக குறைத்து நிறுத்த இயலும். தொந்தரவு இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். பிரச்னை சிறியதாக இருக்கும் போதே சிகிச்சை பெற்றால் எளிதில் சரிசெய்ய முடியும். இத்தழும்பு ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன. பரிசோதனைகள் செய்தபின்பே, அது எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.

நுரையீரல் நோய்கள் ஏற்படும் முன், எந்த வகையான அறிகுறிகள் காணப்படும்?

இருமல், சளி, காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், சளியில் ரத்தம் கலந்து வெளிவருதல், நெஞ்சவலி போன்ற அறிகுறிகள் காணப்படும். சாதாரணமாக இத்தொந்தரவுகள் அனைத்தும் இருவாரங்களில் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் இத்தொந்தரவுகள், 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்து, என்ன பிரச்னை என கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சளியில் ரத்தம் கலந்து வெளிவருவதுடன் உடல் எடை குறைதல் போன்ற தொந்தரவுகள் இருப்பின், உடனடியாக மருத்துவரை பார்த்து தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது.

- டாக்டர் எம்.பழனியப்பன்,

மதுரை. 94425-24147

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us