sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால்?

/

காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால்?

காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால்?

காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால்?


PUBLISHED ON : மே 28, 2017

Google News

PUBLISHED ON : மே 28, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வெதன்று தெரியாமல் திணறுவோம். அதற்கும் ஒரு சில எளிய வழி உள்ளன. அதாவது, காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைபட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அதை எடுத்து விடலாம்.

சிலர், பூச்சி காதுக்குள் போனதும் வெறும் தண்ணீரை ஊற்றுவர். ஆனால், பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள்

இறப்பது இல்லை. அதே போல, குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்னைகளைத் தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான்.

சில குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்னை உள்ளதை தெரிந்து கொள்ளலாம். பலரும் காது கேட்பது மட்டுமே பிரச்னை என்ற புரிந்து

வைத்துள்ளனர். உண்மையில் காதில் வலி, சீழ் வடிவது, கிருமி தொற்று போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.

அதை கண்டறிய சில குறிப்புகள்: தேவையில்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்தால் அதற்கு ஏதேனும் ஒரு பிரச்னை இருக்கக் கூடும் என்று தெரிந்து கொள்வீர்கள். ஆனால் காதில் பிரச்னை இருக்கிறது என்பதை, காதுக்கு அருகே உங்களது கைகளை வைத்து லேசாக வருடி விடுங்கள். அப்போது அழுகை குறைந்தால் பிரச்னை காதில் என்பதை கண்டறிந்து விடலாம்.

காது என்பது மூக்கு, வாயுடன் தொடர்புடையது என்பதால், இவற்றில் ஏற்படும் பிரச்னைகள் கூட காதினை பாதிக்கலாம். எனவே, மூக்கு மற்றும் வாயில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

குழந்தை பிறக்கும்போது, காதுகளின் உள் இருக்கும் மெல்லிய எலும்புகள் மூடியிருக்காது. குழந்தை பிறந்த பிறகு காதுகளை உலர்வாக வைத்திருந்தால்தான் அவை மூடுகின்றன. அதில்லாமல் எப்போதும் சளிப்பிடித்து காதுகள் ஈரமாக இருக்கும்பட்சத்தில் அவை மூடுவதற்கு காலதாமதம் ஏற்படும்.

இந்த சமயத்தில் தான் குழந்தைகளுக்கு தொற்று பிரச்னை ஏற்படுகிறது. காதுக்குள் தொற்று பரவும் போது காதில் சீழ் வடிகிறது. இந்த பிரச்னை உள்ள குழந்தையை குளிக்க வைக்கும் முன் பஞ்சினை தேங்காய் எண்ணெயில் நனைத்து காதுகளில் வைத்துவிட்டால் குளிக்கும் போது தண்ணீர் காதுக்குள்

செல்வதை தவிர்க்கலாம்.

அதிக சப்தம் கேட்கும் இடங்களில் குழந்தைகளை வைத்திருப்பதை தவிர்க்கலாம். வகுப்பறையில் கவனம் செலுத்தத் தவறினால் குழந்தையை அடிப்பதையோ, திட்டுவதையோ விட்டுவிட்டு அவர்களுக்கு காதில் ஏதேனும் பிரச்னை உள்ளதாக என்று கண்டறியலாம்.

குழந்தைகள் தாங்களாகவே பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை காதில் போட்டு குடைவதை தவிர்க்க வேண்டும். மெல்லிய டவலின் நுனிப் பகுதியை லேசாக காதுகளில் விட்டு அருகில் உள்ள நீர்த்தன்மையை போக்கலாமே தவிர, குழந்தைகளின் காதுகளில் பட்ஸ்களைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தக்

கூடாது. காதுகளில் இருந்து மோசமான நாற்றம் வருமாயின் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்பதை உணருங்கள்.






      Dinamalar
      Follow us