தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மஞ்சள் பற்களை மாற்ற என்ன வழி

மஞ்சள் பற்களை மாற்ற என்ன வழி

மஞ்சள் பற்களை மாற்ற என்ன வழி


PUBLISHED ON : டிச 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

* எனது பற்கள் மிகவும் மஞ்சளாக உள்ளது. உடனடியாக வெண்மையாக்க முடியுமா?

பற்கள் இயற்கையாக 3 நிறங்களில் உள்ளன. மஞ்சள், பழுப்பு மற்றும் வெண்மை. இவை தவிர நாம் உண்ணும் உணவு வகைகள், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றால் பற்களின் மீது கறைகளாக படித்து நிறமாற்றத்திற்கு காரணமாகிறது. பற்களின் வெளிப்புறம் உள்ள கறைகளை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பற்களின் உறுதியை பரிசோதிக்க வேண்டும். அதிகமாக தேய்ந்து இருக்கும் பற்களை வெண்மையாக்க முயலும்போது, எனாமல் தேய்மானத்தால் பற்கூச்சம் ஏற்படலாம். பரிசோதனைக்குப் பிறகு பற்களை வெண்மையாக்க 'பிளீச்சிங்' என்ற முறையை பயன்படுத்தலாம். இவற்றில் 2 வகை உண்டு. முதலில் தங்கள் பற்களுக்கு ஏற்ற வகையில் ஒரு டிரே செய்யப்படும். பின் இரவில் உபயோகப்படுத்தக் கூடிய 'பிளீச்சிங்' சொல்யூஷன்' வழங்கப்படும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும். இதில் பற்கள் இயற்கை நிறத்தில் இருந்து மேம்படும். இரண்டாவது வகையில் பல் மருத்துவமனையிலேயே 45 நிமிடங்கள் 'பிளீச்சிங்' முறையை பயன்படுத்தினால், ஒரே நாளில் பற்களை வெண்மையாக்கலாம். கறைகள் அதிகமாக இருந்தால் 2 -3 நாட்களாக சிகிச்சை பெறலாம்.

* என் கீழ்த் தாடையில் உள்ள கடைவாய் பல் பாதி முளைத்த நிலையில் உள்ளது. இருநாட்களாக பல், தாடை, காதில் வலி உள்ளது. பாதி முளைத்த பல்லை எடுக்க முடியுமா?

மேல், கீழ்த்தாடையில் ஞானப்பல் என்னும் கடைவாய் பல் 18-25 வயதுக்குள் முளைக்கும். சிலருக்கு தாடை சிறியதாக அமையும்போது இப்பல் வளர இடமில்லாமல் பாதி முளைத்த நிலையில் இருக்கும். சிலருக்கு இடமின்மை காரணமாக தாடை எலும்பினுள் முழுவதுமாக புதைந்திருக்கும். பாதி முளைத்த நிலையில் உள்ள பற்களை சுற்றியுள்ள ஈறுகள் முழுவதுமாக விலகாமல் இருக்கலாம். இதனுள் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் தங்க நேரிடும். இதன் மூலம் அப்பல் பற்சொத்தையாகலாம். இருபற்களிடையே தங்கும் உணவு பொருட்களாலும் பற்சொத்தை உருவாகலாம். பற்சொத்தை ஆழமாகும்போது, மேற்கூறிய இடங்களில் வலி ஏற்படலாம். பல்பரிசோதனை செய்தபின், ஓ.பி.ஜி., எனப்படும் எக்ஸ்ரே மூலம் பாதி முளைத்த பல்லை சுற்றியுள்ள எலும்பின் அடர்த்தி, அப்பல்லின் வேர்கள் ஆகியவற்றை பார்த்து, சிறிதளவு தாடை எலும்பை கரைத்து, அப்பல்லை முழுவதுமாக எடுக்கலாம். இச்சிகிச்சை முறை குறித்து பயப்பட வேண்டாம். முப்பது நிமிடத்திற்குள் முடிந்துவிடும்.

- டாக்டர் எஸ்.முத்துராமன்

மதுரை. 94430-61160

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us