sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது நிறுத்தலாம்?

/

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது நிறுத்தலாம்?

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது நிறுத்தலாம்?

தாய்ப்பால் கொடுப்பதை எப்போது நிறுத்தலாம்?


PUBLISHED ON : ஜன 20, 2016

Google News

PUBLISHED ON : ஜன 20, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொ துவாக, குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பின், தாய்ப்பால் மட்டுமே ஊட்டச்சத்திற்கு போதாது. குழந்தைகளுக்கு பசி அதிகமாக இருக்கும். குழந்தை அடிக்கடி பசியால் அழுதால், தாய்ப்பாலின் அளவைக் குறைத்து, ஓரளவு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதால், பிரசவம் முடிந்து, மீண்டும் வேலைக்கு செல்லும் முன், குழந்தைக்கு மற்ற திரவ உணவுகளையும் கொடுத்துப் பழக்குங்கள். இதனால், குழந்தை தாய்ப்பாலை எதிர்பார்த்து இருக்காது. ஆறு மாதங்களுக்குப் பின், திட உணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பின், ஒன்றரை வயதிற்குள், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

குழந்தைக்கு பற்கள் முளைக்க துவங்கினால், தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்க ஆரம்பிப்பர்; அப்படி செய்தாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் நேரம் வந்துவிட்டதாக அர்த்தம். குறிப்பிட்ட காலத்திற்கு பின் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதில் ஒருவித வெறுப்புணர்வு ஏற்படும். அப்படி நீங்கள் உணர ஆரம்பித்தாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடலாம். தாய்மார்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு, அதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருந்தால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

அ.சாந்தி,

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர், சென்னை.

dr.shanthi2010@gmail.com






      Dinamalar
      Follow us