தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பற்கள் இடைவெளியை அதிகரிக்கலாமா

பற்கள் இடைவெளியை அதிகரிக்கலாமா

பற்கள் இடைவெளியை அதிகரிக்கலாமா


PUBLISHED ON : செப் 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

எனது வயது 50. நான் முழு பல்செட் உபயோகிக்கிறேன். ஆனால் அது அடிக்கடி லூசாகிறது. தாடை மிகவும் தேய்ந்து விட்டதால் இப்பிரச்னை ஏற்படுகிறது என டாக்டர் பேஸ்ட் கொடுத்துள்ளார். அதை உபயோகித்து பல்செட் அணிந்தால் சிறிது நேரம் மட்டுமே இறுக்கமாக உள்ளது.



'இம்பிளான்ட்' மூலம் பல்செட் அணியலாமா?



தங்களுக்கு பிற உடல் உபாதைகள் உதாரணமாக சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இல்லையெனில் இம்ப்ளான்ட் மூலம்பல்செட் கட்டலாம். தங்களுடைய மேல் மற்றும் கீழ்த் தாடையில் முன்பற்கள் உள்ள இடத்தில் அமைந்துள்ள தாடை எலும்பு உறுதியாக, அதிகளவு தேய்மானம் இல்லாமல் இருந்தால் அதில் 4 இம்ப்ளான்டுகள் பொருத்தி பல்செட் அமைக்கலாம். இம்முறையில் சில பற்கள் மட்டுமே பொருத்தலாம். ஙூதூஞ்ணிட்ச் இம்ப்ளான்ட் எனப்படும் வகையில் இருபக்க கன்ன எலும்புகளில் இருந்து இம்ப்ளான்ட் பொருத்த முடியும். இம்முறையில் தாடை எலும்பு தேய்ந்து இருந்தாலும்கூட முழு பல்செட் கட்ட முடியும். இதனால் தாடை எலும்புகள் தேய்மானத்தில் இருந்து காப்பாற்ற முடியும். நம் இயற்கை பற்கள் போல் பல்செட்டை உபயோகிக்க முடியும். ஙூதூஞ்ணிட்ச் இம்ப்ளான்ட் மட்டுமே மயக்க மருந்து அணிந்து ஆப்பரேஷன் தியேட்டரில் பொருத்தப்படும். பிறவகை இம்ப்ளான்டுகள் பல் மருத்துவமனை÷யிலேயே பொருத்தலாம்.



எனது மேல் முன்பற்கள் சிறியதாக இடைவெளியுடன் உள்ளன. இவற்றை பெரிதாக்க முடியுமா?



மேல் மற்றும் கீழ்த்தாடையில் உள்ள முன்பற்கள் அனைத்தும் சிறியதாக இருந்தால் அவற்றை கரைத்து, கிரவுன் செய்து, பெரிய பற்களை போல தோற்றமளிக்கச் செய்யலாம். இதன்மூலம் இடைவெளி இல்லாமல் செய்ய முடியும். பற்களை கரைக்க விரும்பாவிட்டால் முன்பற்களின் வெளிப்புறத்தில் மட்டும் 0.5 முதல் 1 மி.மீ., வெனிர் எனப்படும் நகஅளவு கனமுள்ள, பற்களின் நிறத்திற்கேற்ற பொருளை பொருத்தலாம். இதனாலும் இடைவெளியை குறைக்க முடியும். ஆனால் இவற்றை கவனமாக பராமரிக்க வேண்டும். மிகவும் லேசாக இருப்பதால் உணவு வகைகள் உண்ணும்போது கவனமாக இருக்க வேண்டும். இவை இரண்டையும் தவிர்த்து கிளிப் மூலம் பற்களை நெருக்கமாக கொண்டு வரலாம். இதனால் இடைவெளி மட்டும் இருக்காதே ஒழிய, பற்களின் அளவு அதேபோலத்தான் இருக்கும்.



பல ஆண்டுகளுக்கு முன் மேல் கடைவாய் பல்லில் வேர் சிகிச்சை செய்தேன். தற்போது அந்தப் பல்லில் வலி உள்ளது. இது எதனால்?



மேல் கடைவாய் பல்லில் 3 வேர்கள் உள்ளன. பற்சொத்தை ஆழமாகி பல்வேர் வரை பரவிவிட்டதால் பல்வேர் சிகிச்சை செய்து இருப்பர். சிலசமயம் இந்த மூன்று வேர்களில் உள்ள பற்கூழ் அறைகளை தவிர சிலசமயம் ஒன்று அல்லது இரண்டு எக்ஸ்ட்ரா பற்கூழ் குழாய்கள் இருக்கக்கூடும். அவற்றை அடைக்காவிட்டால் அதிலுள்ள நுண்ணிய நரம்புகள் மூலம் வலி ஏற்படலாம். சிலசமயம் இப்பற்கூழ் பகுதியை இறுக்கமாக அடைக்காவிட்டாலும், தொற்றுநோய் பரவி வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வேர் சிகிச்சை செய்த பல்லுக்கு 'கிரவுன்' அணிந்துள்ளீரா என நீங்கள் குறிப்பிடவில்லை. கிரவுன் அணியாவிட்டால் மேலே உள்ள பில்லிங் உடைந்துவிடும். இதன் மூலம் வலி வரக்கூடும். இதைத் தவிர ஈறுகளில் பிரச்னை இருந்தாலும் வலிவரக்கூடும். எனவே பல் டாக்டரிடம் பரிசோதித்த பின்பே திரும்ப வேர்சிகிச்சை செய்ய முடியுமா எனத் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு வேர் சிகிச்சை செய்ய வேண்டுமெனில் 3 அல்லது 4 முறை செய்வது நல்லது. ஏனெனில் வேர்களில் அடியில் உள்ள நோய் தொற்று குறைய காலஅவகாசம் தேவை.



- டாக்டர் எஸ்.முத்துராமன்,

மதுரை. 94430-61160



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us