sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

/

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...

எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...


PUBLISHED ON : ஜூலை 14, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 14, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைதானம், பூங்காக்களின், இடப்பக்கம், 'வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும், 'வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வாழ்க்கை வாழலாம் அதிகரித்து வரும், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, தொற்று அல்லாத, நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன. நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம் தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, 'வாக்கிங்' எனப்படும் நடைப்பயிற்சி. நடைப் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள், இதை மேற்கொள்ளும் முறை குறித்து விளக்குகிறார், மருத்துவர் ராமலிங்கம்.

தினமும், 'வாக்கிங்' செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், 'இன்சுலின்' சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

கூடுதல் ஞாபக சக்தி: தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்னை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது. 'வாக்கிங்' செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது. இதனால், வயோதிகத்தில், 'அல்சீமர், 'டிமென்ஷியா' போன்ற ஞாபக மறதி தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. நடைப்பயிற்சியால், இரவில் நல்ல தூக்கம் வருவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை.

ஆய்வில் தகவல்: எலும்புகளின் வலிமைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தை, நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்று, உடலுக்கு தர தேவையான, வைட்டமின் 'டி' நடைப்பயிற்சியின்போது, நம் மீது விழும் சூரிய ஒளி மூலம் நமக்கு கிடைக்கிறது.

பெண்களுக்கு வரும் பேறுகால நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மலட்டுத் தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஆகியவற்றை, நடைப்பயிற்சி வராமல் தடுப்பதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு, 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம், வாரத்திற்கு, 150 நிமிடங்கள், 'வாக்கிங்' போக வேண்டும். நடைப்பயிற்சியின்போது, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உடல் வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்ட தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். செருப்பு, ஷூ என, வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப, காலணிகளை அணியலாம்.

இரவில் 'வாக்கிங்' போகக்கூடாது: அமைதியான சுற்றுப்புற சூழலுடன், தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்தவெளியில், 'வாக்கிங்' போவதே, சிறந்த பலனை தரும். அவரவர் இருப்பிடத்தை பொறுத்து, மொட்டை மாடி, தெருக்களிலும், நடைப்பயிற்சி போவதில் தவறில்லை. உணவு செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், இரவில், உணவருந்திய பின், 'வாக்கிங்' போகக் கூடாது. மைதானம், பூங்காக்களின், இடப் பக்கம், 'வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இதற்கு, ஆய்வுபூர்வமான நிரூபணங்கள் எதுவும் இல்லை. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும், 'வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வளமான வாழ்க்கை வாழலாம்.

டாக்டர் ராமலிங்கம்,

மருத்துவ துறை உதவி பேராசிரியர்,

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை






      Dinamalar
      Follow us