sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

குழந்தைகள் மயங்கி விழுந்து உயிரிழப்பது ஏன்?

/

குழந்தைகள் மயங்கி விழுந்து உயிரிழப்பது ஏன்?

குழந்தைகள் மயங்கி விழுந்து உயிரிழப்பது ஏன்?

குழந்தைகள் மயங்கி விழுந்து உயிரிழப்பது ஏன்?


PUBLISHED ON : மே 25, 2025

Google News

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறவியிலேயே இதயத் தசைகள் வழக்கமான அளவை விடவும் தடிமனாக இருக்கலாம். இதை, 'கார்டியோ மயோபதி' என்று சொல்லுவோம்.

இரண்டாவது, பிறவியிலேயே குரோமோசோம் அசாதாரண நிலையால், இதயத்தில் உருவாகும் மின்சாரம், இதயம் முழுதும் சீராகப் பரவாது. ஒரு இடத்தில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும், சில பகுதிகளில் மொத்தமாகவும் தடைபடலாம்.

இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்காது. இதனால், இதயம் வேகமாக துடிக்கும் போது, ரத்தத்தின் அளவு குறைந்து கொண்டே வந்து, மயங்கி விழுந்து விடுவர். இது போன்ற அவசர நிலைகளில், விலா எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக மார்பு பகுதியை அழுத்தி, இதயத்தை துடிக்க வைக்கும் சி.பி.ஆர்., செய்வது அவசியம். இதற்கான விழிப்புணர்வை தற்போது பலரும் ஏற்படுத்துகின்றனர்.

பிறவியிலேயே இதய நாளங்கள் சுருங்கி இருந்தால், குழந்தை பருவத்தில் எதுவும் தெரியாது. 20 வயதிற்கு மேல் தடகள விளையாட்டு, ஜிம்னாஸ்டிக், நடனம் என்று ஆடும் போது, இதயத் துடிப்பு வேகமாக சீரற்று துடித்து, மயங்கி விடுகின்றனர்.எத்தனை நவீன வசதிகள் வந்தாலும், இதயத்தில் கோளாறு இருக்கிறதா என்பதை கண்டறிய, அடிப்படையான பரிசோதனை முறைகள் ஈ.சி.ஜி.,யும், எக்கோவும் தான்.

ஒரு எக்கோ செய்தால் போதும்; இதயத்தில் கோளாறு இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர் எஸ்.தணிகாசலம்,

இதய நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,

ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம், சென்னை

044 - 45928631, 989400 48269


tsrmc@yahoo.com






      Dinamalar
      Follow us