sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

குறையும் அழுத்தம்

/

குறையும் அழுத்தம்

குறையும் அழுத்தம்

குறையும் அழுத்தம்


PUBLISHED ON : செப் 16, 2015

Google News

PUBLISHED ON : செப் 16, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திடீரென நிகழும் ஒரு நிகழ்வால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை, 'அக்கியூட் ஸ்ட்ரெஸ்' என்றும், தொடர் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை, 'எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ்' என்றும் சொல்கிறார்கள்.

அதிக வேலை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது. இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின் மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை 'குரோனிக் ஸ்ட்ரெஸ்' என்று அழைக்கிறார்கள்.

'ட்ராமிக் ஸ்டெரெஸ்' என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலை யே இப்படி அழைக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால், பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க, அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்க பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பது போல உணர்ந்தால், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள். குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள்.

அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுகள். நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தை யை வளர்க்க முயலுங்கள்.






      Dinamalar
      Follow us