தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/ ராணுவத்தின் பெருமை பேசும் முத்துலட்சுமி

ராணுவத்தின் பெருமை பேசும் முத்துலட்சுமி

ராணுவத்தின் பெருமை பேசும் முத்துலட்சுமி


PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1272146


அது ஒரு ராணுவ மருத்துவமனை.

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் இருந்தது.

1965 ஆம்வருடம் இந்தியா-பாக். போர்உக்கிரமாகநடந்துகொண்டிருந்தது.

குண்டடிபட்ட ராணுவ வீரர்களை கொண்டு வந்து சேர்த்தபடி இருந்தனர்.

அவர்களை ஒடி ஒடிக் கவனித்துக் கொண்டிருந்த நர்ஸ்களில் ஒருவராக இருந்தவர் முத்துலட்சுமி.

இரவு பகல்பாராது,உணவு தண்ணீர் கேளாது வீரர்களை குணப்படுத்தும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது சேவையைப் பாராட்டி அரசு அவரது சொந்த ஊரில் மூன்று ஏக்கர் நிலத்தை வழங்கியது.

அந்த மூன்று ஏக்கர் நிலத்தையும், முதியோர் இல்லம் கட்ட தானமாக வழங்கிவிட்டு, அமைதியாக இன்றைக்கு சமூகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் 86 வயதாகும் பிரீகேடியர் முத்துலட்சுமி.

1938ஆம் வருடம் திருநெல்வேலிமாவட்டம் கரிசல்குளத்தில் பிறந்தவர், மருத்துவம் சார்ந்ததுறைகளில் இருப்பவர்கள் ராணுவத்தில் பணியாற்ற முன் வரவேண்டும் என்ற பிரதமர் நேருவின் அழைப்பினை ஏற்று நர்சிங் படித்திருந்த முத்துலட்சுமி ராணுவத்தில் சேர்ந்தார்.

பாக்,பங்களாதேஷ் உள்ளீட்ட பல்வேறு போர்கள் நடந்தபோது போர்முனையிலேயே இருந்து பணியாற்றியவர், பணியில் இருக்கும்போதே அனுமதி பெற்று சட்டம் படித்தவர்.

கிட்டத்தட்ட 34 வருட ராணுவ சேவைக்கு பிறகு பணி ஒய்வு பெற்றதும், வீட்டில் முடங்கிக் கிடக்காமல் வழக்கறிஞராக பணியை தொடர்பவர். ராணுவ வீரர்கள் தொடர்பான வழக்குகளில் நீதி பெற நீதிமன்றம் சென்று வருபவர்.

ராணுவத்தில்லெப்டினென்ட், கேப்டன்,மேஜர்.கர்னல்,பிரிகேடியர்,மேஜர் ஜெனரல் வரை பதவி உண்டு இதல் பிரிகேடியர் வரையிலான பதவி வகித்து அந்த பட்டத்துடன் பெருமையாக வலம் வருபவர். ,ராணுவத்தின் பெருமையை இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களிடம் எடுத்துச் சொல்லிவருபவர்.

மகன்கள் வெளிநாடுகளில் பெரியவேலையில் நிறயைசம்பாதித்து இவரை உள்ளங்கையில் வைத்துதாங்கினாலும், அன்றாடம் யாருக்காவது உதவவேண்டும் என்பதற்காக எறும்பு போல சுறுசுறுப்பாக ஒடிக்கொண்டு இருப்பவர்.

அதிகம் ஆசைப்படாதீர்கள், யாரைப்பார்த்தும் பொறாமைப்படாதீர்கள் ,எதற்கும் பதட்டப்படாதீர்கள் வாழ்க்கையை எளிமையாக அதேநேரம் வலிமையாக எதிர்கொள்ளுங்கள், வயது என்பது முதுமையின் அடையாளம் அல்ல அது ஒரு எண் அவ்வளவுதான் என்பவர்.

இவரைப் பற்றி அறிந்து கொண்ட கவர்னர் ரவி கவர்னர் மாளிகைக்கு இவரை வரவழைத்து பாராட்டி கவுரவித்தார்.

Image 1272148


அவரது மெயில் முகவரி: brigkml@yahoo.com.

-எல்.முருகராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us