சுற்றுச்சூழல் தினத்தின் கசப்பான சாட்சி: குப்பை மேட்டில் தஞ்சம் புகுந்த 'ராணுவ நாரைகள்'!
சுற்றுச்சூழல் தினத்தின் கசப்பான சாட்சி: குப்பை மேட்டில் தஞ்சம் புகுந்த 'ராணுவ நாரைகள்'!
PUBLISHED ON : ஜூன் 04, 2026 05:06 PM

ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி வந்துவிட்டால் போதும், உலகெங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணிகளுக்கும், மரக்கன்றுகள் நடும் விழாக்களுக்கும் பஞ்சமே இருக்காது, ஆனால், நாம் கொண்டாடும் இந்த 'உலக சுற்றுச்சூழல் தினத்தில், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு மனிதக் குலத்தின் முகத்தில் அறையும் கசப்பான உண்மைகளை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.



ஒரு அழகான ஏரிக்கரையிலோ அல்லது அடர்ந்த மரக்கிளையிலோ சிறகுகளை விரித்துப் பறக்க வேண்டிய ஓர் அரிய பறவை, உலக சுற்றுச்சூழல் தினத்தின் விடியலில் மனிதன் உருவாக்கிய குப்பை மலையின் மீது மௌனமாக அமர்ந்திருப்பது நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது.
'நாங்கள் இயற்கையைச் சிதைத்துவிட்டோம்; பறவைகளுக்கான வனாந்தரத்தை, வெறும் குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டோம்' என்று மக்களின் மனசாட்சியை நோக்கிக் கேள்வி எழுப்புகிறது.
இனியாவது வெறும் முழக்கங்களோடு நிறுத்தாமல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும் காடுகளையும் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். அதுவே, இந்த வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யும் உண்மையான பிராயச்சித்தமாக இருக்க முடியும்!
-எல்.முருகராஜ்
