sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

அந்த ஒரு புன்னகை போதும்..

/

அந்த ஒரு புன்னகை போதும்..

அந்த ஒரு புன்னகை போதும்..

அந்த ஒரு புன்னகை போதும்..


PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1281341
மூன்றடி உயரமும்,18 கிலோ எடையும் கொண்டு உலகிலேயே உயரம் குறைந்த டாக்டர் என்ற கவனம் பெற்று வலம் வரும் கணேஷ் பரையாதான்(23) இன்று உயரம் குறைந்தவர்களின் எழுச்சி நாயகன்.

குஜராத் மாநிலம் பாவ்நகர் கோர்க்கி கிராம விவசாயின் குடும்பத்தில் பிறந்த கணேஷ்க்கு ஆறு சகோதரிகளும்,ஒரு சகோதரனும் உள்ளனர்.சகோதர,சகோதரிகள் எல்லோரும் இயல்பான வளர்ச்சி பெற இவர் மட்டும் உயரமும்,எடையும் குறைந்தராக ஒரு கட்டத்தில் அறியப்பட்டார்.

இவரது உயரம் இவருக்கு கேலி,கிண்டல் என்பது போன்ற பாதகங்களை கொண்டு வந்தாலும், ஆசிரியர்,நண்பர்கள்,பெற்றோர் ஆகியோரின் அபரிமிதமான அன்பு என்ற சாதகங்களையும் உண்டு பண்ணியது.

பிளஸ் டூ தேர்விலும் நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றதன் அடிப்டையில் இவருக்கு மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது, ஆனால் இவரால் அவசர கேஸ்களை கவனிக்க முடியாது ஆகவே இவருக்கு டாக்டராகும் தகுதி கிடையாது என குஜராத் மாநில அரசு இவரை மருத்துவம் படிக்க அனுமதி மறுத்தது.

முடியாது கூடாது என்று எந்த தடை வந்தாலும் அதை உடைத்தே பழகிய கணேஷ்,'நான் அவசர கேஸ்களை கவனிக்கமுடியாது என்று எப்படி மருத்துவ கவுன்சில் முடிவு செய்யலாம்' என உயர்நீதி மன்றத்தை அணுகினார்.,அங்கும் இவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை.சோர்ந்து போகாத கணேஷ் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார், அங்கே இவரது வாதத்தில் உள்ள நேர்மையை உணர்ந்த நீதிமன்றம் இவருக்கு மருத்துவம் படிக்க அனுமதிக்க உத்திரவிட்டது.

Image 1281343


இதன் அடிப்படையில் ஐந்து வருட படிப்பை முடித்து தற்போது பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றுகிறார்.தனது மனவலிமை மற்றும் விடா முயற்சியின் காரணமாக தரமான மருத்துவராக, நோயாளிகளின் மதிப்பை பெற்றவராக,உயிரைக்காக்க உயரம் ஒரு பொருட்டல்ல என்பதை நிருபீக்கும் வகையில் கணேஷ் வலம்வருகிறார்.

நோயாளிகள் என்னைப் பார்த்ததும் முதலில் ஆச்சரியப்படுவர், நோய் பற்றிய பயம் போய் தன்னை அறியாமலேயே என்னைப் பார்த்து சிரிப்பர். அந்த சிரிப்பு ஒன்று போதும் நானும் நோயாளியும் சகஜமாகி சட்டென நெருங்கிவிடுவோம், இது அவர்களது நோய் தீர்க்க மந்திரம் போல வேலை செய்கிறது.

பல்வேறு நாட்டு தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை என்னை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்,இருந்தாலும் என்னால் சிகிச்சை பெற்ற நோயாளி குணமடையும் போது சந்தோஷமாய் சிந்தும் ஒரு புன்னகையைத்தான் சிறந்த பாராட்ட கருதுகிறேன் என்று சொல்லும் டாக்டர் கணேஷ் பரையாவிற்கு நமது வாழ்த்துக்களை மனதார தெரிவிப்போம்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us