தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/பெற்றால்தான் பிள்ளையா?

பெற்றால்தான் பிள்ளையா?

பெற்றால்தான் பிள்ளையா?


PUBLISHED ON : அக் 01, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2018 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பக்கம் உள்ள காளிகாம்பட்டியைச் சேர்ந்தவர் கஸ்துாரி



ஆசிரியப்பணி மீதான நாட்டம் காரணமாக திருமணம் செய்துகொள்ளவில்ல.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருபது வருடங்களுக்கு முன் பணியாற்றினார்.



அப்போது அவர் இருந்த தெருவி்ல் மனநிலை சரியில்லாத நிலையில் பத்து வயது பெண் குழந்தை ஒன்று கேட்பாரற்று சுற்றித்திரிந்தது.அந்த குழந்தையை மீனாட்சி என்றழைத்து இவரே பராமரித்துவந்தார்.அந்த குழந்தையும் அம்மா அம்மா என்றழைத்தபடி இவரையே சுற்றி சுற்றி வந்தது, பாசமான அம்மா மகளாக வலம் வந்தனர்.



பணி ஒய்வு பெற்ற பிறகு கிடைத்த அரசுப்பண பலன்களை வைத்துக்கொண்டு சொந்த ஊரான காளிகாம்பட்டிக்கு வந்த கஸ்துாரியம்மா இங்கு ‛கஸ்துாரிபா மகளிர் நல அறக்கட்டளை' துவங்கி ஏழை எளிய பெண்களுக்கு படிப்பு சுயதொழில் உள்ளீட்ட பலவகை உதவிகளை செய்துவருகிறார்.



தனக்கு முதுமை வந்துவிட்ட நிலையில் தனக்கு ஏதாவது நேரிட்டால் மீனாட்சியை யார் பார்த்துக் கொள்வார்கள் என்றெண்ணி பெறாமல் பிள்ளை மீனாட்சிக்கு திருமணம் முடித்துவிட வேண்டும் என்று எண்ணினார்.



மீனாட்சிக்காக வீட்டைக்கட்டினார், வீட்டின் வாசலில் ஒரு கடையையும் கட்டினார், மீனாட்சியை திருமணம் செய்பவர்களுக்கு இந்த வீடு கடை இரண்டுமே உண்டு என்று அறிவித்தார்.வரக்கூடிய மாப்பிள்ளை மளிகைக்கடையோ பேன்சி ஸ்டோரோ வைத்து பிழைத்துக்கொள்ளலாம், அதில் வரும் வருமானத்தை அவர் விருப்பப்படி செலவழிக்கலாம் அவரது பிறந்த வீட்டிற்கு கொடுக்கலாம் என்றெல்லாம் அறிவித்தார்.



ஆனாலும் மீனாட்சியின் மனநிலை சரியில்லாத தன்மை மற்றும் தோற்றம் காரணமாக மாப்பிள்ளை கிடைப்பதில் தாமதமாகிக்கொண்டே போகிறது.தான் இருக்கும் போதே மீனாட்சிக்கு ஒரு நல்லதொரு வழிகாட்டவேண்டும் என்று எண்ணியுள்ள கஸ்துாரியின் எண்ணம் ஈடேறுமா?



அவரது தொடர்பு எண்:6381066427.



-எல்.முருகராஜ்









தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us